புரோமோபெண்டமீன்கோபால்ட்டு(III) புரோமைடு
புரோமோபெண்டமீன்கோபால்ட்டு(III) புரோமைடு (Bromopentaamminecobalt(III) bromide) என்பது [Co(NH3)5Br]2+ என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒருங்கிணைவுச் சேர்மமான கோபால்ட்டின் இருபுரோமைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஊதா நிறத்துடன் நீரில் கரையக்கூடிய திடப்பொருளாக இச்சேர்மம் உள்ளது. ஒத்த குளோரோபெண்டமீன்கோபால்ட்டு(III) குளோரைடு நன்கு அறியப்பட்ட ஒரு வேதிப்பொருளாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
14283-12-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
[Co(NH3)5Br]Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 383.798 கி/மோல் |
தோற்றம் | ஊதா |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநீரிய அம்மோனியாவில் கோபால்ட்டு(II) உப்புகளின் கரைசலை ஆக்சிசனேற்றம் செய்து புரோமோபெண்டமீன்கோபால்ட்டு(III) புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[1]
- 2 CoBr2 + 8 NH3 + 2 NH4Br + H2O2 → 2 [Co(NH3)5Br]Br2 + 2 H2O
இத்தகைய அணைவுச் சேர்மங்களுக்கான கட்டமைப்பு அல்லது வாய்பாடு கூட புரிந்து கொள்ளப்படுவதற்கு முன்பே, 1870 ஆம் ஆண்டுகளில் இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆரம்பகால வேலை, புரோமைடு குழுக்களில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே நைட்ரேட்டு மற்றும் டைதயோனேட்டு போன்ற பிற அயனிகளுடன் பரிமாற்றம் செய்யக்கூடியதாக இருப்பதைக் காட்டுகிறது.[2]
அணைவுச் சேர்மம் நீர்சேர்க்கைக்கு உட்படுகிறது, அதாவது புரோமைடு தண்ணீரால் இடம்பெயர்கிறது::[Co(NH3)5Br]Br2 + H2O → [Co(NH3)5(H2O)]Br3
இச்செயல்முறை பிளாட்டினத்தால் வினையூக்கம் செய்யப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Diehl, Harvey; Clark, Helen; Willard, H. H. (1939). "Bromopentamminocobalti Bromide". Inorganic Syntheses. Vol. 1. pp. 186–188. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132326.ch66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132326.
- ↑ Jörgensen, S. M. (1879). "Beiträge zur Chemie der Kobaltammoniakverbindungen. II. Ueber die Bromopurpureokobaltsalze". Journal für Praktische Chemie 19: 49–69. doi:10.1002/prac.18790190110. https://zenodo.org/record/1427878.
- ↑ Archer, M. D.; Spiro, M. (1970). "Heterogeneous Catalysis in Solution. Part VIII. Catalysis of the Aquation of the Bromopentaamminecobalt(III) Ion by Metallic Platinum". Journal of the Chemical Society (1): 78–81. doi:10.1039/j19700000078.
மேலும் வாசிக்க
தொகு- Loehlin, James H. "The Study of a Cobalt Complex-A Laboratory Project." Journal of Chemical Education. எஆசு:10.1021/ed059p1048
- Williams, Gregory M; Olmsted, John, III; Preksa, Andrew P., III (1989). "Coordination complexes of cobalt: inorganic synthesis in the general chemistry laboratory". Journal of Chemical Education 66 (12): 1043–5. doi:10.1021/ed066p1043. Bibcode: 1989JChEd..66.1043W.