புர்லிஜாரன் அருவி

புர்லிஜாரன் அருவி (/pʰurɵlid͡ʒʱɵrɵɳɵ/</link> ) என்பது இந்தியாவின் ஒடிசாவில் உள்ள களஹாண்டி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவில் உள்ள ஒரு வற்றாத அருவியாகும். இந்த அருவி 16 மீட்டர் உயரமுடையது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பு காரணமாகச் சிதறிய நீரில் ஏற்படும் பலவண்ண வானவில்லுக்கு இந்த அருவி பெயர் பெற்றது.[1] இது பொழுது போக்கிற்கான சுற்றுலாத்தலமாகும். இந்த அருவி கார்லாபட் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ளது.

புர்லிஜாரன் அருவி
Phurlijharan
ଫୁରଲିଝରଣ
புர்லிஜாரன் அருவி
Map
அமைவிடம்பாவானிபட்னா, களஹாண்டி மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆள்கூறு19°46′53″N 83°06′40″E / 19.7815046°N 83.1110626°E / 19.7815046; 83.1110626 (Phurlijharan)
வகைஅருவி
மொத்த உயரம்15 m (49 அடி) (நடுவில்)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிசகதா ஆறு

சுற்றுலா தொகு

புர்லிஜாரன் ஒடிசா மாநில நெடுஞ்சாலையான 44-ல் பவானிபட்னாவிலிருந்து 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவில் உள்ளது. ஒடிசா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் பவானிபட்னா மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களுடன் இந்த அருவிக்குப் போக்குவரத்து சேவையினை வழங்குகின்றன.[2]

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "CHAPTER-I: Kalahandi district". Shodhganga. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/18473/11/11_chapter%201.pdf. பார்த்த நாள்: 29 February 2016. 
  2. Sahu, Jagadish Prasad (January 2006). "Land Use Pattern of Kalahandi District". Orissa Review. http://odisha.gov.in/e-magazine/Orissareview/jan2006/engpdf/Land_use_%20patter_of_kalahandi%20dist.pdf. பார்த்த நாள்: 29 February 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்லிஜாரன்_அருவி&oldid=3814794" இலிருந்து மீள்விக்கப்பட்டது