கார்லாபட் வனவிலங்கு சரணாலயம்

ஒடிசாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம்

கார்லாபட் வனவிலங்கு சரணாலயம் (Karlapat Wildlife Sanctuary) இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது ஒரிசாவிலுள்ள கலாகந்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைமையிடமான பவானிபாட்னாவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கார்லாபட் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

கார்லாபட் நுழைவாயில்

சரணாலயம் 175 சதுர கிலோமீட்டர் அல்லது 68 சதுர மைல் பரப்பளவில் விரிந்துள்ளது[1] . கிழக்கு மேட்டு நிலத்தின் ஈரமான இலையுதிர் காட்டு சுற்றுச்சூழலுக்குள் இச்சரணாலயம் அமைந்துள்ளது[2]. கலப்பு இலையுதிர் காடுகள் மற்றும் குறுங்காடு வகை தாவரங்கள் இச்சரணாலயத்தில் மிகுந்து காணப்படுகின்றன[3].

கார்லாபட் சாலை

புலி, சிறுத்தை, சம்பார் இன மான்கள், நீலான், குரைக்கும் மான், பல வகையான பறவைகள் மற்றும் பல்வேறு ஊர்வன ஆகிய வனவிலங்குகள் இச்சரணாலயத்தில் வாழ்கின்றன[4][5][6].

மேற்கோள்கள்

தொகு
  1. Palei et al. (2011). "Avifauna of Karlpat Wildlife Sanctuary". Indian Forester, Vol. 10, pp. 1197–1203.
  2. Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Island Press; Washington, DC. pp. 306–308
  3. Negi, Sharad Singh (2002). Handbook of National Parks, Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing. p. 144
  4. Palei et al. (2011). Avifauna of Karlpat Wildlife Sanctuary. Indian Forester, Vol. 10, pp. 1197–1203
  5. Palei (2012). " Sighting of Green Avadavat Amandava formosa in Karlapat Wildlife Sanctuary, Odisha, India". ZOO’s PRINT, Volume XXVII, Number 1, p. 25 https://www.researchgate.net/publication/262009707_Sighting_of_Green_Avadavat_Amandava_formosa_in_Karlapat_Wildlife_Sanctuary_Odisha_India
  6. Palei (2014). A first record of the Great Eared-Nightjar Lyncornis macrotis (Vigors, 1831) (Aves: Caprimulgiformes: Caprimulgidae) in Odisha, India. Journal of Threatened Taxa 6(12): 6566–6567; https://dx.doi.org/10.11609/JoTT.o3968.6566-7