புற்றனையம்

ஒரு வகை புற்றுநோய்

புற்றனையம் அல்லது குடல் மஞ்சள் கட்டி (carcinoid, கார்சினாய்ட் அல்லது carcinoid tumor) என்பது மெதுவாக வளரும்[1] புற்றுநோய் ஆகும். நுரையீரலிலும் செரிமான உறுப்புகளிலும் அதிகமாகத் தோன்றுகிறது. வெகு அரிதாகவே தோன்றும் இந்நோய், ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் வெளியே தெரியாமலே வளரும்.

புற்றனையம்
Carcinoid
சிறுகுடலின் (நோயியல் மாதிரி) புழைக்குள் நுழைந்த ஒரு கார்சினாய்டுக் கட்டியின் படம் (படத்தின் நடுவில்).
சிறப்புபுற்றுநோயியல்

வளர்ந்த நிலையில் இயக்குநீரைச் சுரக்கும். இதிலிருந்தே இந்நோய் தெரிந்து கொள்ளப்படுகிறது. நுரையீரல் மற்றும் செரிமான மண்டல நோய் 60 வயதினை தாண்டியவர்களிடம் தான் தெரியவருகிறது. முகமும் மார்புப் பகுதியும் சிவந்து காணப்படும். மூச்சு விடுவதில் சிரமம், முக்கிய அறிகறிகளாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டு அறுவை மருத்துவம் செய்து கொண்டால் நல்ல குணம் பெறலாம். இயக்குநீர் செரடோனின் அதிக அளவில் சுரக்கும். குருதிக் குழல் புடைத்துக் கொண்டிருக்கும்.,

குறைந்த இரத்த அழுத்தம் இதயப் படபடப்பு, மூச்சு விடுவதில் சிரமம் இவையும் சில அறிகுறிகளாகும். பிற நோய்களுக்கு மருத்தும் மேற்கொள்ளும் போது தற்செயலாகவே இந்நோய் கண்டு கொள்ளப்படுகிறது. கணினி தள கதிர்படம் (CT), காந்த ஒத்ததிர்வு படம் (MRI) நோய்காண உதவும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புற்றனையம்&oldid=2811337" இலிருந்து மீள்விக்கப்பட்டது