புற்றுநோய்க்கு கதிர் தடுப்பு மருத்துவம்
அம்மையநோய், இளம்பிள்ளைவாதம் போன்ற பல நோய்கள் வராமல் தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் தரப்படுவதுபோல புற்றுநோய்க்கு கதிர் தடுப்பு மருத்துவம் (radio immunotherapy for cancer) மேற்கொள்ளப்படுகிறது. அதிகம் கேடு விளைவிக்காத கதிர் ஐசோடோப்பால் குறியிடப்பட்ட எதிர்பொருள் (Antibody ) கொடுக்கப்படும்போது அது புற்றை மட்டுமே தாக்கி, அங்கு கதிர்வீச்சினை வெளிப்படுத்தி புற்றைமட்டும் அழிக்கிறது இந்தக் கதிர் தடுப்பு மருத்துவம். சில புற்று உயிரணுக்கள் சிறப்பான சில ஆன்றிஜன்களைக் (Antigen) கொண்டுள்ளன. இவ் உயிரணுக்கள் புற்றினை எதிர்த்துத் தாக்கும் எதிர்பொருளை தோற்றுவிக்கின்றன. இந்த எதிர்பொருள் கதிரியக்கமுள்ள ஐசோடோப்பால் குறியிடப்பட்டு நோயாளிக்குக் கொடுக்கும்போது, அவை புற்று உயிரணுக்களை அடைந்து, கதிர்வீச்சால் புற்று உயிரணுக்களை அழிக்கின்றன. இம்முறையே கதிர் தடுப்பு மருத்துவம் (Radioimmunotherapy-RIT ) எனப்படுகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- மெஷ் Radioimmunotherapy
- Radioimmunotherapy.org பரணிடப்பட்டது 2017-04-23 at the வந்தவழி இயந்திரம்