புற்றுநோய் பட்டியல்
உலகை அச்சுறுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. ஒரு புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்படி, 2017 இல் 9.6 மில்லியன் மக்கள் புற்று நோயால் இறந்தனர் என்றும், உலகில் நிகழும் ஒவ்வொரு ஆறாவது இறப்பும் புற்றுநோயால் ஏற்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் காட்டியது. அத்துடன், உலகில் நிகழும் இறப்புகளுக்கான காரணிகளில், இதயக் குழலிய நோய்க்கு அடுத்தபடியான, இரண்டாவது முக்கிய காரணியாகப புற்றுநோய் அமைகிறது.[1]
ஒரு உறுப்பிலிருந்து, இன்னொரு உறுப்புக்குப் பரவும் வல்லமை கொண்ட, அசாதாரணமான, கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டும், பல ஒன்றுக்கொன்று தொடர்புடைய நோய்களின் பொதுவான பெயர் புற்றுநோய் எனப்படுகின்றது.[2]
உடலின் எந்த உறுப்பிலும் தோன்றலாம். மனித உடலில் நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.[2] எந்த வயதினரையும் இந்நோய் தாக்கக்கூடும். இன வேறுபாடின்றியும், இடவேறுபாடின்றியும் உலகின் அனைத்து மக்களையும் தாக்கும். ஆரம்ப நிலையில் நோய்கண்டு கொள்ளப்பட்டால், புற்றுநோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
பொதுவாக மனித உடலின் எந்தப் பகுதியில் அல்லது உறுப்பில் புற்றுநோய் ஏற்படுகிறதோ, அதனைக்கொண்டே புற்றுநோய் விபரிக்கப்படும். ஆனாலும், சில உடல் உறுப்புகள், ஒன்றுக்கு மேற்பட்ட இழையங்களைக் கொண்டிருப்பதனால், துல்லியமாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில், குறிப்பிட்ட புற்றுநோய் உயிரணுக்கள், எந்த வகை உயிரணுவில் இருந்து உருவாகியதோ, அதனைப் பொறுத்து புற்றுநோய் மேலதிகமாக வகைப்படுத்தப்படும்.
புற்றுநோய் பட்டியல்
தொகுஇது 120 க்கும் மேற்பட்ட நோய்களின் தொகுப்பாகும்:
- அண்ணப்புற்று நோய்
- ஆசனவாய் புற்றுநோய்
- ஆண்குறிப் புற்றுநோய்
- இரைப்பைப் புற்றுநோய்
- ஈரல் புற்றுநோய்
- உணவுக் குழாய் புற்றுநோய்
- உமிழ்நீர் சுரப்பிப் புற்றுநோய்
- ஊனீர் சுரப்பிப் புற்றுநோய்
- எலும்புப் புற்றுநோய்
- கண் புற்றுநோய்
- கணையப் புற்றுநோய்
- கருப்பைப் புற்றுநோய்
- கருப்பைவாய் புற்றுநோய்
- காது புற்றுநோய்
- குருதிப் புற்றுநோய்
- குழந்தைப்பருவ புற்றுநோய்
- கொழுப்புத்திசு புற்றுநோய்
- சிறுகுடல் புற்றுநோய்
- சூல்பைப் புற்றுநோய்
- தைராய்டு சுரப்பி புற்றுநோய்
- தொண்டைப் புற்றுநோய்
- தோல் புற்றுநோய்
- நுரையீரல் புற்றுநோய்
- பிட்யூட்டரி சுரப்பிப் புற்றுநோய்
- பித்தப்பைப் புற்றுநோய்
- பீனியல் சுரப்பிப் புற்றுநோய்
- பெண்குறிப் புற்றுநோய்
- பெருங்குடல் புற்றுநோய்
- மலக்குடல் புற்றுநோய்
- மார்பகப் புற்றுநோய்
- மூச்சுக்குழாய் புற்றுநோய்
- மூளைப் புற்றுநோய்
- வாய் புற்றுநோய்
- விரைப் புற்றுநோய்
- விரைப்பை புற்றுநோய்
- எய்ட்சு கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்
- குடல்வால் புற்றுநோய்
- வைப்போமா
- நாக்குப் புற்றுநோய்
- மூக்குப் புற்றுநோய்
- மூளைஉறைப் புற்றுநோய்
- வில்ம்சு புற்றுநோய்
- கன்னப் புற்றுநோய்
- உதட்டுப் புற்று நோய்
- தசைப்புற்று நோய்
- குருதி செவ்வணு ப்புற்று நோய்
- குருதி வெள்ளையணு புற்றுநோய்
- மண்ணீரல் புற்றுநோய்
- சுவானோமா நரம்புறைப் புற்றுநோய்
- உள்நாக்குப் புற்றுநோய்
- டான்சில் புற்றுநோய்
- கார்சினாய்ட்-மெதுவாக வளரும் புற்றுநோய்
- வயிற்றுச் சுவர் பற்றுநோய்
- ஈறு புற்றுநோய
- மைலோமா
- தண்டுவட புற்றுநோய்
- முதுகெலும்பு ப்புற்றுநோய்
- மூச்சுக் குழாய் புற்றுநோய்
- மூச்சுப்பை -நுரைஈரல்- குழாய் புற்றுநோய்
- கண்ணிமை புற்றுநோய
- சிறுநீர் சுரப்பிப் புற்றுநோய்
- சிறுநீர் பைபுற்றுநோய்
- அட்றினல் சுரப்புப் புற்றுநோய்
ஆஸ்கின் பற்று
மேற்கோள்கள்
தொகு- ↑ Max Rosie and Hannah Ritchie. "Cancer". Our World in Data. Oxford Martin School and University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ 2.0 2.1 "Understanding Cancer". National Cancer Institute. U.S. Department of Health and Services. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.