புலமைப்பரிசில்

மாணவனின் கல்விக்காக வழங்கப்படும் உதவித் தொகை

புலமைப்பரிசில் என்பது மாணவன் ஒருவரின் கல்வியை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் மானியம் அல்லது நிதி உதவி ஆகும். உதவித்தொகை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது வழக்கமாக நன்கொடையாளர் அல்லது விருதை நிறுவியவரின் மதிப்புகள் மற்றும் நோக்கங்களை பிரதிபலிப்பதாக அமைகிறது. உதவித்தொகை பணத்தை மாணவர் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.[1][2]

புலமைப்பரிசிலும் மானியமும்

தொகு

புலமைப்பரிசில், மானியம் ஆகிய சொற்கள் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றீடாக ஒன்று பயன்படுத்தப்பட்ட போதிலும் ஒரு வித்தியாசம் உள்ளது. புலமைப்பரிசில் நிதி தேவை கூறுகளைக் கொண்டிருப்பதுடன் அதற்கான மற்றைய தகுதி அளவுகோல்களையும் கொண்டிருக்கும்.

  • கல்வி புலமைப்பரிசில் பொதுவாக தேர்ந்தெடுப்பதற்கு குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி அல்லது அளவீட்டு மதிப்பெண்களைக் கொண்டிருக்கும்.
  • விளையாட்டுத்துறை சார்ந்த புலமைப்பரிசில்கள் பொதுவாக பெறுபேறுகளை அல்லது வெற்றியை அளவீட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • திறமை அடிப்படையிலான புலமைப்பரிசிகள் அதற்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டது.

இதேவேளை மானியங்கள் நிதித்தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதற்கான விண்ணப்பத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.[3]

வகைகள்

தொகு

பொதுவாக புலமைப்பரிசில்கள் பின்வரும் வகையில் வகைப்படுத்தப்படும்:

திறமை அடிப்படையிலானது: இந்த விருதுகள் ஒரு மாணவரின் கல்வி, கலை, விளையாட்டு அல்லது பிற திறன்களை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் பெரும்பாலும் விண்ணப்பதாரரின் பாடநெறி நடவடிக்கைகள் மற்றும் சமூக சேவை பதிவில் அடிப்படையில் வாங்கப்படும். தனியார் நிறுவனங்களால் அல்லது நேரடியாக மாணவர்களின் நோக்கம் கொண்ட கல்லூரியால் வழங்கப்படும். மிகவும் பொதுவான தகுதி அடிப்படையிலான புலமைப்பரிசில், கல்விசார் சாதனை அல்லது தரப்படுத்தப்பட்ட சோதனைகளில் அதிக மதிப்பெண்களை அங்கீகரித்து அதற்காக வழங்கப்படும். இதுபோன்ற பெரும்பாலான தகுதி அடிப்படையிலான புலமைப்பரிசிலகள் மாணவருக்கு நேரடியாக வழங்கப்படுவதை விட, மாணவர் கலந்துகொள்ளும் நிறுவனத்தால் நேரடியாக செலுத்தப்படுகிறது.[4]

தேவை அடிப்படையிலானது: சில தனியார் தேவை அடிப்படையிலான விருதுகள் தெளிவின்மையால் புலமைப்பரிசில் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், புலமைப்பரிசில் பெரும்பாலும் தகுதி அடிப்படையிலானது, அதே நேரத்தில் மானியங்கள் தேவை அடிப்படையிலானவை. [5]

மாணவர்-குறித்தது: இவை விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் பாலினம், இனம், மதம், குடும்பம் மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவற்றில் ஒன்று அல்லது பல காரணிகளின் அடிப்படையில் தகுதி பெற வேண்டும். சிறுபான்மை புலமைப்பரிசில் இந்த பிரிவில் மிகவும் பொதுவான விருதுகளாக வழங்கப்படலாம்.[சான்று தேவை]

தொழில்வாண்மை சார்ந்தது: இவை ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறையைத் தொடரத் திட்டமிடும் மாணவர்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விருதுகள்.[6]

கல்லூரி சார்ந்தது: கல்லூரி சார்ந்த புலமைப்பரிசில் தனிப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் அதிக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கல்வி மற்றும் தனிப்பட்ட சாதனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சில புலமைப்பரிசில்களுக்கு "பிணைப் பத்திர" தேவை உள்ளது.[7] பெறுநர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொழில் வழங்குனருக்கு குறித்த நிபந்தனைகளின் கீழ்வேலை செய்ய வேண்டியிருக்கலாம். இல்லையெனில், அவர்கள் உதவித்தொகையிலிருந்து பெற்ற ஆதரவின் மதிப்பை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கலாம்.[8]

புலமைப் பரிசில்கள், தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படலாம். சில நிறுவனங்கள் மீளச்செலுத்தலைக் கோருகின்றன. மாணவர்களால் மீளச்செலுத்தப்படும் பணம் மற்றொரு புலமைப் பரிசிலுக்கு பயன்படும்.

புலமைப்பரிசில் தகவல்கள்

தொகு

மக்கள் தங்கள் சொந்த பிராந்தியங்களில் புலமைப்பரிசிகளைப் பெற முயலுகின்றனர். உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டு இவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாக, புலமைப் பரிசில் ஒன்றுக்கு தகுதி வாய்ந்த மக்கள் தொகை சிறியதாக இருப்பதால் இவை குறைவான போட்டித்தன்மை கொண்டவையாகக் காணப்படுவது உண்டு. பின்வரும் வகைகளில் இவை பற்றிய தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.

வழிகாட்டுதல் ஆலோசகர்கள்: புலமைப் பரிசில்கள் தொடர்பாகத் தேடல்களைத் தொடங்கும் போது, ​​பெரும்பாலான உயர்கல்வி நிலைய அல்லது பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் வழிகாட்டுதல் ஆலோசகர்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். உள்ளூர் அரச புலமைப் பரிசில் முதலானவற்றில் இவர்களிடம் நேரடியான தகவல்கள் காணப்படும்.

இலாப நோக்கற்ற மற்றும் தொண்டு அறக்கட்டளைகள்: பெரும்பாலான இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தங்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் வருங்கால மாணவர்களுக்கு வழங்கக் கூடிய புலமைப் பரிசில்களை நிறுவுகின்றன.

சமுக மட்ட நிறுவனங்கள்: மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஒரு உள்ளூர் சமூக மட்ட நிறுவனங்கள் இது பற்றிய தகவல்களைப் பெற்று மாணவர்களுக்கு பரப்புகின்றன.

துறைசார் ஆசிரியர்கள்: குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகளுக்கு கலைக் கல்விக்கான அணுகலைப் பெற சில துறைசார் ஆசிரியர்கள் இத்தகைய புலமைப் பரிசில் தகவல்களைப் பெற மாணவர்களை வழிகாட்டுகின்றனர்.

நிறுவனங்கள்: அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்கள், தொழில் முனைவோர் முயற்சிகளுக்கு புலமைப்பரிசில் வழங்குகின்றன.

தொழிற்சங்கங்கள்: சில தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நலம்புரிச் சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கும் அவர்களின் சார்புடைய குழந்தைகளுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குகின்றன.[9]

வழிபாட்டு நிலையங்கள்: வழிபாட்டு நிலையங்கள் அல்லது சமய நிருவனங்கள் தமது உருப்பினர்களுக்கு புலமைப் பரிசிகளை வழங்குவதற்கு முன்வருகின்றன . சமயம் சார்ந்த கற்கை நெறிகளுக்கு அதிக நிதிகள் காணப்படுகின்றன.

வர்த்த சம்மேளனம்:வர்த்தக சம்மேளனங்கள் வர்த்தக துறை சார்ந்த மாணவர்களைன் திறமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் திறமை அடிப்படையினான புலமைப் பரிசிகளை வழங்கி வருகின்றன.

பிற தன்னார்வ நிறுவனங்கள்: பிற தன்னார்வ நிறுவனங்கள் புலமைப்பரிசில்கள் அல்லது விருது மானியங்களை வழங்குகின்றன. அதன் பின்னணி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட புலம் நிறுவனத்தின் துறையை ஒன்றுடன் ஒன்று சேர்க்கிறது.

பல்கலைக்கழகம்: பல்கலைக்கழகங்கள் அல்லது அதனை நிருவகிக்கும் நிறுவனம் அல்லது பாலகலைக் கழகமானியங்கள் ஆணைக்குழு போன்ற அரச அமைப்பு மிகக் குறைந்த திறமையான மாணவர்களின் படிப்புகளுக்கு நிதியளிக்க நிதி உதவலாம். தகுதி பெரும்பாலும் ஒரு மாணவர் குறித்த பாடப்பிரிவில் அதி உச்ச பெறுபேற்றினை பெற்றிருத்தல் முதலியவையாக இருக்கலாம். இது குறித்த தகவல்களைக் கூட பல்கலைக்கழகங்கள் தகவல்களை வழங்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Peterson, Kay (4 September 2008). "Financial Aid Glossary". fastweb. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
  2. [1] "University Reform: Report of the Royal Commissioners On the State of the University and Colleges of Oxford"]. The Observer. 1952. https://search.proquest.com/docview/474208063]. 
  3. Scholarships.com. "Loans Vs Grants Vs Scholarships - Scholarships.com". www.scholarships.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  4. "College Scholarship". School Grants Guide. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
  5. Nykiel, Teddy; Helhoski, Anna (24 June 2016). "The Complete Guide to College Grants". NerdWallet.
  6. "Aid Based on Your Career Choice" (in en-US). Debt.org. https://www.debt.org/students/scholarships-and-grants/aid-based-on-your-career-choice/. 
  7. Teng, Amelia. "Many slam A*Star scientist's protest against her scholarship bond". ST. http://www.stcommunities.sg/education/many-slam-astar-scientists-protest-against-her-scholarship-bond. பார்த்த நாள்: 15 December 2014. 
  8. Dancing out of A*Star. https://sg.news.yahoo.com/dancing-star-005756200.html. பார்த்த நாள்: 15 December 2014. 
  9. Konrad, Matt (August 28, 2014). "Organize Scholarship Support From a Labor Union". US News. பார்க்கப்பட்ட நாள் November 8, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலமைப்பரிசில்&oldid=3791522" இலிருந்து மீள்விக்கப்பட்டது