புலிகுத்தி பட்டான்
புலிகுத்தி பட்டான் என்பது புலியிடமிருந்து ஆடுமாடு போன்ற கால்நடைகளை காக்க போராடி இறந்த வீரரை குறிப்பதாகும். இவர் குரும்பர் இனம் ஆவர். இவ்வாறு இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.சேலம் மேற்கு பகுதியில் இந்த நடுகல்லினை 'புலிகுத்தி பட்டான் நடுகல்' என அழைக்கின்றனர்.
தெய்வமாக வணங்குதல்
தொகுபல்வேறு இடங்களில் புலிகுத்தி இறந்த வீரரை குல தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலை மீது அமைந்துள்ள மாசி பெரியசாமி ஒரு உதாரணமாகும்.
- செங்கமாரி புலிகுத்திஅம்மன் கோயில் - தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், செங்கமாரி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
- புலிகுத்தி கருப்பு சாமி
- புலிகுத்தி பெரியசாமி
- புலிகுத்தி சீரங்கன்
சொல்லிலக்கணம்
தொகுபுலிகுத்தி - புலி தாக்கி பட்டான் - இறந்துபட்டான் என்பதன் சுருக்கம்.
புலிகுத்தி நாணயம்
தொகுபுலிகுத்தி நாணயத்தின் முன்புறம், ஒரு வீரன் காலை மடக்கிய நிலையில், தன்னை நோக்கி பாயும் புலியை எதிர்த்து சண்டை போட்டு, அதன் வயிற்றுக்குள் கத்தியை பாய்ச்சும் காட்சி உள்ளது. நாணயத்தின் பின்புறத்தில், நடுவில் ஒரு குத்துவாள், அதன் மேலும் கீழும், ’ராம ரா’ என, நாகரி வடிவில், எழுதப்பட்டு உள்ளது.[1] வீரனின் வீரத்தை போற்றவோ, முன்பே இறந்து வழிபடும் தெய்வமாக மாறிய, ஒரு புலிகுத்தியின் நினைவாகவோ, இந்த நாணயத்தை, தஞ்சையை ஆண்ட மன்னர்கள், வெளியிட்டு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.[1]
தமிழகத்தில் புலிகுத்தி பட்டான் நடுகற்கள்
தொகு- மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே எஸ்.பெருமாள்பட்டியில் புலிகுத்திபட்டான் நடுகல் [2]
- ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் உள்ள, சீதேவி அம்மன் கோவில் பிரகாரத்தில், புலிகுத்தி கல் உள்ளது.
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகே கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மலையமான் கோயில் அருகே புலிகுத்திகல் உள்ளது. [3]
- சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியில் புலிகுத்தி வீரன் நடுகற்கள் உள்ளன.[4]
- சேலம் நகர் அம்மாப்பேட்டை சாலையில் புலிகுத்தி வீரன் நடுகல் உள்ளது. [5]
புலிகுத்தி பெயர்
தொகுபுலியுடன் மோதி உயிர்விடும் வீரனின் சந்ததியினர், புலிகுத்தி என்ற சிறப்பு பெயரை, தங்கள் பெயரின் முன் சேர்த்து உள்ளனர்
திரைத்துறையில்
தொகு2021 இல் எம். முத்தையா இயக்கத்தில் புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் தலைப்பில் புலிகுத்தி பாண்டி என்று இருந்தாலும், உள்ளடகத்தில் புலியால் இறந்த வீரன் குறித்த கதை இடம்பெறவில்லை. மதுரை மாவட்டத்தில் புலிகுத்தி பாண்டி, புலிகுத்தி கருப்பு சாமி என புலிகுத்தி வீரர்களை சிறு தெய்வங்களாக வணங்கி தங்கள் குழந்தைகளுக்கு பெயரிடும் முறைக்கு சான்றாக இத்திரைப்பட பெயர் இடம்பெற்றது.
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 "குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிப்பு". Dinamalar. 30 ஜன., 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ மலர், மாலை (10 ஜூன், 2022). "புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு". www.maalaimalar.com.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "புலிக்குத்திக் கல்லும் சதிக் கல்லும்". இந்து தமிழ் திசை. 13 டிச., 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ https://www.maalaimalar.com/amp/news/district/discovery-of-pulikudthi-veeran-stones-in-the-arunootumalai-area-561618
- ↑ https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/mar/24/demolition-of-400-year-old-buckwheat-plant-3387579.html