புலிட்சர் பரிசு

(புலிற்சர் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது இத்துறைகளுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படுகின்றது. இது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.[1][2][3]

புலிட்சர் பரிசு
விளக்கம்ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்கொலம்பியா பல்கலைக்கழகம்
முதலில் வழங்கப்பட்டது1917
இணையதளம்http://www.pulitzer.org/

இத்துறைகளைச் சேர்ந்த இருபத்தொரு பிரிவுகளில் ஆண்டுதோறும் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் இருபது பிரிவுகளுக்கான பரிசாக ஒவ்வொன்றும் 10,000 அமெரிக்க டாலர்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது. ஊடகவியல் துறை சார்ந்த பொதுச் சேவைப் பிரிவில், பரிசாக ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பரிசு, ஒரு செய்தி இதழ்களுக்கே வழங்கப்படுவதாயினும், ஒரு தனி மனிதருடைய பெயரும் பரிந்துரைக்கப்படலாம்.

இது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு சூன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Pulitzer Prizes".
  2. "FAQ". The Pulitzer Prizes. Columbia University. பார்க்கப்பட்ட நாள் April 15, 2019. 24. How is 'Pulitzer' pronounced? The correct pronunciation is 'PULL it sir.'
    The pronunciation /ˈpjuːlɪtsər/ PEW-lit-sər, even if considered mistaken, is quite common, and included in the major British and American dictionaries.
  3. "Pulitzer Prize Board Announces New Book Category". Pulitzer.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிட்சர்_பரிசு&oldid=4100940" இலிருந்து மீள்விக்கப்பட்டது