புல்லஅள்ளி அரசு ஆரம்பப் பள்ளி
புல்லஅள்ளி அரசு ஆரம்பப் பள்ளி தமிழ்நாடு மாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கெலமங்கலம் ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட புல்லஅள்ளி என்ற கிராமத்தில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இங்கு படிப்பதற்கு மாணவர்களே வராத காரணத்தால் ஊர்மக்களின் வேண்டுகோளின்படி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேபோல் 52 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தகட்டுர் ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி 09ம் தேதி ஜூன் மாதம் 2014ம் தேதி மூடப்பட்டது. [1]
வரலாறு
தொகு1979-ம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளியாக துவங்கப்பட்டது. புல்லஅள்ளி, ஆலாப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே இங்கு படித்து வந்தார்கள். இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்துவந்தனர். கடந்த 2012-13-ம் கல்வியாண்டில் இங்கே படித்த குழந்தைகளின் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்துவிட்டது. சென்ற ஆண்டுவரை ஒரு ஆசிரியர் மட்டுமே வந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். 33 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இப்பள்ளியில் 2013-14 கல்வியாண்டில் மாணவர்கள் யாரும் வராதநிலையில் மூடும் நிலைக்கு வந்துள்ளது.
அமைவிடம்
தொகுஇந்தயாவின், தமிழ்நாடுமாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கெலமங்கலம் ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட புல்லஅள்ளி என்ற கிராமத்தில் மலையின் உச்சியில் இந்த அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து 8 கிலோ மீட்டர்கள் காட்டுவழியே நடந்து அல்லது படிகளில் 3 கிமீ தூரம் நடந்தால் ஒன்றரை மணி நேரத்தில் மலையின் அடிவாரத்தை அடையலாம்.[2]
நிலை
தொகு10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 வீடுகளுடன் அமைந்திருந்த விவசாய கிராமமான புல்லஅள்ளி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையினால் பல குடும்பங்கள் ஊரை விட்டு நகரங்களுக்கு குடியேற தற்போது புல்லஅள்ளியில் 8 குடும்பங்களும், ஆலாப்பட்டியில் 7 குடும்பங்களும் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களும் தங்கள் குழந்தைகளை மலையடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டதால் புல்லஅள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் (2013-2014) புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. ஆகையால் ஊர்மக்களின் வேண்டுகோளின்படி இப்பள்ளியை 2013 இல் தற்காலிகமாக மூடிவிட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.