கள்வர் கோமான் புல்லி என்பவர் சங்ககாலக் குறுநில மன்னனாவார்

இவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள்

கல்லாடனார் - அகம் 83, 209,
மாமூலனார் - அகம் 61, 295, 311, 393

இவன் ”களவர் கோமான்” என்றும் ”இளையர் பெருமகன்” என்றும் அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.[1] இவன் மழபுலம் என்ற நாட்டை வென்றான்.[2]


சங்ககாலத் தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று வேந்தர்கள் (மூவேந்தர்) ஆண்டுவந்தனர். இவர்களின் ஆட்சிக்கு அப்பால் வடபால் ஓய்மானாடு, தொண்டைநாடு, வேங்கட நாடு ஆகிய நாடுகள் இருந்தன. இவற்றில் ஓய்மானாட்டை நல்லியக்கோடன் வில்லியாதன் என்னும் மன்னர்கள் ஆண்டுவந்தனர். தொண்டை நாட்டைத் தொண்டைமான் இளந்திரையன் ஆண்டுவந்தான். வேங்கட நாட்டை ஆண்டவன் புல்லி.[3] புல்லி ஆண்ட நாட்டுக்கு மேற்கில் மழநாடு, புன்னாடு, கொண்கானம் என்னும் கொண்கான நாடு ஆகியவை இருந்தன. புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. அகம் 83
  2. அகம் 61
  3. புறம் 385, அகம் 209
  4. புடையல்அம் கழல்கால் புல்லி குன்றத்து…. மொழிபெயர் தேஎம்(அகநானூறு, 295:11.15)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்லி&oldid=4081230" இலிருந்து மீள்விக்கப்பட்டது