புல் கெண்டை மீன்

புல் கெண்டை மீன்
புல் கெண்டை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
துணைக்குடும்பம்:
இசுகோலியோபார்பினே
பேரினம்:
டீனோபேரிங்டான்

இசுடெயிண்டாச்னெர், 1866
இனம்:
டீ. ஐடெல்லா
இருசொற் பெயரீடு
டீனோபேரிங்டான் ஐடெல்லா
வாலென்சியென்னிசு, 1844)
வளர்ந்த புல் கெண்டை மீன்

புல் கெண்டை மீன் (grass carp) என்பது ஒரு நன்னீர் மீனாகும். இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.[1]இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

உணவுப் பழக்கம்

தொகு

இது புல் பூண்டுகளை உண்பதால் இப்பெயர் பெற்றது. இவை நீரில் வளரும் ஆகாயத்தாமரையை தவிர்த்து அனைத்து வகை நீர்த்தாவரங்களையும் குறிப்பாக, வேலம் பாசியை விரும்பி உண்ணும். இவை தன் எடையைவிட பல மடங்கு எடையுள்ள தாவரங்களை தினமும் உண்டு மிக விரைவாக வளரும். குளங்களில் அடர்ந்துள்ள தாவரங்களை கட்டுப்படுத்த ஏற்ற மீன் இதுவாகும். இது உணவாக உட்கொள்ளும் தாவரங்கள் கிட்டத்தட்ட பாதி அளவு செரிக்காமலே கழிவாக வெளியேற்றப்படுவதால் குளத்தில் அடியில் அக்கழிவு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது. மேலும் இம்மீனின் கழிவுப் பொருட்களை சாதா கெண்டை தன் உணவாக உட்கொள்ளும்.இம்மீன் ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் 1.5 முதல் 2 கிலோ கிராம் எடை வரை வளரும்.[2]

இனப்பெருக்கம்

தொகு

இம்மீன்களை தூண்டுதல் முறையிலும் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.[3]

உசாத்துணை

தொகு
  1. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
  2. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
  3. காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்_கெண்டை_மீன்&oldid=3330095" இலிருந்து மீள்விக்கப்பட்டது