புளியங்காடு வேங்கை மரத்து நாச்சியம்மன் கோயில்

வேங்கை மரத்து நாச்சியம்மன் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் வாழவந்திக் கோம்பை பஞ்சாயத்திற்குட்பட்ட புளிங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இந்தக் கோயிலானது வேங்கை மரங்கள் சூழ வடதிசையில் மூலவரைக் கொண்டு அமைந்துள்ளது.

திருவிழா தொகு

இக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுகிறது. இது மூன்று நாள் திருவிழாவாகும். மற்ற விசேச நாட்களில் அம்மனுக்கு அபிசேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றன.

வேங்கை மரத்து நாச்சியம்மனுக்கு உடன்பிறந்த சகோதரிகள் இவரையும் சேர்த்து ஏழு நபர்களாகும். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களில் கோயில் கொண்டுள்ளனர்.[சான்று தேவை]

அமைவிடம் தொகு

நாமக்கல்லிருந்து கொல்லிமலை செல்லும் சாலையில் 25வது கி.மீ தொலைவில் காரவள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது அங்கிருந்து சுமார் 2கி.மீ தொலைவில் நாச்சியம்மன் ஆலயம் உள்ளது.