புளி குடி
புளி குடி என்பது கேரள மாநிலத்தில் தாய்மையடைந்த பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் செய்யப்படும் ஒரு சடங்காகும். இதற்காகப் புளி போன்ற நான்கைந்து புளிப்புச் சுவையுடைய பழங்களை ஒன்றாகக் கலந்து அதன் சாற்றை எடுப்பார்கள். இந்த சாற்றை முதலில் தாய்மையடைந்த பெண்ணின் கணவன் மனைவியின் வாயில் ஊற்றுவான். அடுத்து இருவரது தாய், தந்தை ஊற்றுவர். அதைத் தொடர்ந்து உறவினர்கள் ஊற்றுவார்கள். இது தமிழ்நாட்டில் வளைகாப்பு என அழைக்கப்படும் சடங்கு போன்ற ஒரு சடங்காகும்.