புளூ பென்னி அருங்காட்சியகம்
புளூ பென்னி அருங்காட்சியகம் (Blue Penny Museum) மொரிசியசு நாட்டின் தலைநகரமான போர்ட் லூயிசு நகரத்தில் இருக்கும் ஒரு வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ளது. மொரியசு நாட்டின் வரலாறு மற்றும் கலைக்காக இந்த அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புளூ பென்னி அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.[1]
அருங்காட்சியக சேகரிப்பில் 1847 ஆம் ஆண்டு காலத்தின் நீலப் பென்னி மற்றும் சிவப்புப் பென்னி அஞ்சல் வில்லைகள் இடம்பெற்றுள்ளன. இந்த அஞ்சல் தலைகள் 1993 ஆம் ஆண்டு மொரிசிய வணிக வங்கியின் தலைமையிலான மொரிசிய நிறுவனங்களின் கூட்டமைப்பால் $2,000,000 விலைக்கு வாங்கப்பட்டு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு மொரிசியசுக்கு கொண்டு வரப்பட்டன. [1]இந்த அஞ்சல் வில்லைகளின் மூலங்கள் தற்காலிகமாக மட்டுமே ஒளிரும் வகையிலும் பெரும்பாலான நேரங்களில் பிரதிகளை மட்டுமே பார்க்க இயலும் வகையிலும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
மொரிசியசு வர்த்தக வங்கியால் [1]நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 1881 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு சிற்பி பிராசுபர் டி பினேயினால் உருவாக்கப்பட்ட பால் மற்றும் வர்ஜீனியாவின் அசல் சிலையும் இடம் பெற்றுள்ளது, [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Mauritius museums information". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2007-05-11.
- ↑ Prosper d’Epinay by Emmanuel Richon.
புற இணைப்புகள்
தொகு- Blue Penny Museum, Blue Penny Museum Website
- Mauritius Stamps Album