புளோரிடா நீரிணை
புளோரிடா நீரிணை (Straits of Florida) என்பது, வட அமெரிக்கத் தலை நிலத்துக்கு தெற்கு-தென்கிழக்குத் திசையில், புளோரிடா கீஸ் தீவுக் கூட்டத்துக்கும், கியூபாவுக்கும் இடையில், மெக்சிக்கோ வளைகுடாவையும், அத்திலாந்திக் பெருங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. கீ வெஸ்ட் தீவுக்கும், கியூபாவின் கரைக்கும் இடையில் காணப்படும் இந்நீரிணையின் மிக ஒடுக்கமான பகுதி 150 கிமீ (93 மைல்) அகலம் கொண்டது. இதன் ஆழம் 1,800 மீ (அண்ணளவாக 6,000 அடி).[1] மெக்சிக்கோ வளைகுடாவில் இருந்து செல்லும் வளைகுடா நீரோட்டத்தின் தொடக்கமான புளோரிடா நீரோட்டம் இந்நீரிணையின் வழியே செல்கின்றது.
எண்ணெயும் எரிவாயுவும்
தொகுபுளோரிடா கீசுக்குத் தெற்கே மாநிலக் கடற் பகுதியில், 1947 இலிருந்து 1962 வரை நான்கு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டன. 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் புளோரிடா கீசுக்குத் தெற்கே கூட்டாட்சி அரசின் கடற் பகுதியில் கல்ஃப் ஒயில் நிறுவனத்தால் மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகள் அனைத்தும் உலர் துளைகள். இது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் 1977 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, ஐக்கிய அமெரிக்காவின் தனிப் பொருளாதார வலயத்திற்கும், கியூபாவுக்கும் இடையிலான எல்லை கியூபாவுக்கும் புளோரிடாவுக்கும் நடுப் பகுதியில் உள்ளது.[2]
புளோரிடாவுக்கு எதிரே, கியூபாவின் வட கரைக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் அந்நாட்டின் மூன்று எண்ணெய் வயல்கள் இருக்கின்றன.[3] வட கியூபா கிண்ணப் பகுதியில் 5,500,000,000 barrels (870,000,000 m3) கண்டுபிடிக்கப்படாத திரவ எண்ணெயும், 9.8 டிரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வகம் மதிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் அக்கிண்ணப் பகுதியின் கரைக்கு அப்பால் இருக்கும் பகுதியிலேயே உள்ளன.[4]
புளோரிடாக் கரைக்கு அப்பால் எண்ணெய், வாயு கண்டறிய அனுமதிக்கும் பிரச்சினை 2008 ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க சனாதிபதித் தேர்தலின்போது சூடான விவாதத்துக்கு உள்ளானது. புளோரிடாக் கரையில் இருந்து 60 மைல்கள் (97 கிமீ) தொலைவில், கியூபாவின் கடற் பகுதியில் சீனாவின் எண்ணெய் நிறுவனம் எண்ணெய் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளதாகப் பத்தி எழுத்தாளரான யோர்ச்சு வில்சு என்பவர் எழுதியிருந்தார். இதை கரைக்கு அப்பால் எண்ணெய் கண்டறிவதை ஆதரிக்கும் வேட்பாளர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தனர்.[5] எனினும் அந்த நேரத்தில் கிபாவின் கடற் பகுதியில் எவரும் எண்ணெய் கண்டு பிடிப்பதில் ஈடுபட்டிருக்கவில்லை.
2004 ஆம் ஆண்டில் எசுப்பானிய எண்ணெய் நிறுவனமான ரெப்சோல், கியூபாவுக்கும், புளோரிடா கீசுக்கும் இடையில் உள்ள ஆழமான கியூபாக் கடற் பகுதியில் எண்ணெய்க் கிணறொன்றைத் தோண்டி எண்ணெய்ப் படிவுகளைக் கண்டுபிடித்தனர். ஆனால் இது வணிகத்துக்கு உரியதல்ல என தீர்ப்பளிக்கப்பட்டதால் அக்கிணறு மூடப்பட்டது.[6] 2008 ஒக்டோபரில், கியூபாவின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழமான கடற் பகுதியில் எண்ணெய், வாயு என்பவற்றைக் கண்டறிவதற்காக, பிரேசிலின் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாசுடன் கியூபா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது.[7][8] யூலை 2009 ஆம் ஆண்டில், எண்ணெய் கண்டறிவதற்கான அனுமதியை உருசிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் வகையில் உருசிய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கியூபா கையெழுத்திட்டது.[9] 2011 மே மாதத்தில், எண்ணெய்க்கான வாய்ப்புக்கள் குறைவாக இருந்ததால், பெட்ரோபாஸ் 2008 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.[10]
பகமாசு
தொகு2009 ஆம் ஆண்டில் போக்லாந்துத் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட பகமாசு பெட்ரோலியம் நிறுவனமும் நோர்வேயைச் சேர்ந்த நிறுவனமான "இசுட்டட் ஒயில்" என்னும் நிறுவனமும், பகாமா நாட்டின் கடற் பகுதியில் எண்ணெய் கண்டறியும் முயற்சியில் கூட்டு முயற்சி ஒன்றை அறிவித்தனர்.[11][12] எனினும் அப்பகுதியின் பல்வேறு நாடுகளுடன் தனிப் பொருளாதார வலயத்தின் எல்லைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால் அந்த முயற்சி தள்ளி வைக்கப் பட்டதாக பகமாசு அரசு அறிவித்தது.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Strait of Florida www.sea-seek.com
- ↑ United Nations, Maritime boundary - modus vivendi effected by exchange of letters between the United States of America and the Republic of Cuba, 27 April 1977, PDF file.
- ↑ University of Texas, Jorge R Pinon Cervera: Cuba's energy challenge: a second look பரணிடப்பட்டது 2009-06-12 at the வந்தவழி இயந்திரம், PDF file, retrieved 3 March 2009.
- ↑ Assessment of Undiscovered Oil and Gas Resources of the North Cuba Basin, Cuba, 2004, (2005) US Geological Survey, Fact Sheet.
- ↑ George Will (5 June 2008): The gas price we deserve, accessed 13 March 2009.
- ↑ Reuters (16 April 2008): Cuban off-shore drilling put off until 2009, accessed 11 March 2009.
- ↑ Time (23 October 2008): How Cuba's oil could change the US embargo பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம் Retrieved 17 December 2008.
- ↑ "Petrobras signs with Cuba", World Oil, December 2008, p.109.
- ↑ BBC News, Russia to drill for oil off Cuba, 29 July 2009.
- ↑ "Petrobas abandons oil exploration in Cuba". MercoPress. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
- ↑ Reuters (18 May 2009): BPC Limited and StatoilHydro to reopen Bahamian energy exploration with offshore... பரணிடப்பட்டது 2013-02-01 at Archive.today, accessed 28 May 2009.
- ↑ BPC website, Overview of assets பரணிடப்பட்டது 2009-07-19 at the வந்தவழி இயந்திரம், accessed 15 July 2009.
- ↑ Vernon Clement Jones, "Deveaux confirms Cuban oil negotiations" பரணிடப்பட்டது 2009-06-29 at the வந்தவழி இயந்திரம், Nassau Guardian, 7 July 2009, accessed 15 July 2009