புள்ளிகள் (விளையாட்டு)
புள்ளிகள் என்னும் விளையாட்டை இருவரோ பலரோ விளையாடலாம். கட்டங்களை வரைந்த தாளில் விளையாட வேண்டும். ஒவ்வொருவரும் கோடுகள் இணையும் இடத்தில் வெவ்வேறு நிறங்களில் புள்ளியிட வேண்டும். ஒவ்வொருவரும் மற்றொருவரின் புள்ளியை சுற்றி வளைத்து வெற்றி கொள்ள வேண்டும். எதிர் ஆளின் புள்ளியைச் சுற்றிலும் தன் புள்ளிகளை இட வேண்டும். தம் புள்ளிகளால் எதிராளியின் புள்ளியை சுற்றி வளைத்ததும், தம் புள்ளிகளை கோடால் இணைக்க வேண்டும். அதிக புள்ளிகளை சுற்றி வளைத்தவரே ஆட்டத்தின் வெற்றியாளர் ஆவார்.
விதிகள்
தொகு- இந்த ஆட்டத்தை குறிப்பிட்ட கட்டங்களைக் கொண்ட தாளில் விளையாடலாம். எடுத்துக்காட்டாக, 60 கிடைக்கோடுகளையும், 40 நேர்க்கோடுகளையும் வரைந்துகொள்ளலாம்.
- ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- விளையாட்டில் உள்ள அனைவரும் குறிப்பிட்ட வரிசைப்படி விளையாட வேண்டும். அனைவரும் புள்ளி இட்டதும் ஒரு சுற்று முடிவடையும். இதே வரிசையிலேயே அனைவரும் விளையாட வேண்டும். ஆட்டம் தொடரும்.
- கோடுகள் இணையும் இடத்தில் புள்ளி இட வேண்டும். ஏற்கனவே புள்ளி உள்ள இடத்தில் மீண்டும் புள்ளியை வைக்க முடியாது. ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்ட பகுதிக்குள்ளும் புள்ளியை வைக்க முடியாது.
- சுற்றி வளைக்கப்பட்ட பகுதியை சுற்றி புள்ளிகள் இட முடியும். ஆனால், ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்ட பகுதியை மீண்டும் சுற்றி வளைக்க முடியாது.
- சுற்றி வளைப்பதற்காக அருகருகே புள்ளிகளை இட்டு, வேலி அமைத்து நெருங்கும் வேளையில், எதிராளியின் புள்ளி குறுக்கிட்டால், சுற்றி வளைக்க முடியாமல் போகும்.
- ஒரு புள்ளியை சுற்றி வளைக்க, அதைச் சுற்றியுள்ள எட்டு இடங்களிலோ, மேல்-கீழ்-இடது-வலது ஆகிய நான்கு இடங்களிலோ புள்ளிகளை இடலாம். எதிராளியின் பல புள்ளிகளையும் சுற்றி வளைக்கலாம்.
- எல்லா இடங்களிலும் புள்ளி வைத்ததும் ஆட்டம் முடிவடையும். ஆட்டத்தின் இறுதியில் புள்ளிகள் எண்ணப்படும். எதிராளியின் எத்தனை புள்ளிகளை சுற்றி வளைக்கிறோமோ, அத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும். அதிக மதிப்பு எண்ணை பெற்றவரே ஆட்டத்தை வென்றவர் ஆவார்.
இணைப்புகள்
தொகு- புள்ளிகள் விளையாட்டு - வலைவாசல் பரணிடப்பட்டது 2020-05-23 at the வந்தவழி இயந்திரம்
- விளையாட்டும் விதிகளும்
- புள்ளிகள் விளையாட்டு {{நாட்டுத் தகவல் {{{1}}}
| flaglink/core | variant = | size = | name = | altlink = national rugby union team | altvar = rugby union}}