புவன் (Bhuvan, சமஸ்கிருதம்: भुवन, "பூமி"), என்பது கூகுள் எர்த் மற்றும் விக்கிமேப்பியா போன்றதொரு இணையத்தளம் ஆகும். இதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 90வது பிறந்த நாளையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

புவன்
Bhuvan
உருவாக்குனர்இஸ்ரோ
தொடக்க வெளியீடுஆகஸ்ட் 12, 2009
அண்மை வெளியீடுபீட்டா / ஆகத்து 12 2009 (2009-08-12); 5614 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைவிண்டோஸ் 2000, XP, விஸ்டா
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைVirtual globe
உரிமம்Freeware
இணையத்தளம்http://bhuvan.nrsc.gov.in/

இந்திய செயற்கைக்கோளான ரிசோர்ஸ்சாட்-1 போன்றவற்றிலிருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி புவன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், பூமியில் எங்கு ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. இந்திய நகரங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் இது தருகிறது.

புவனில் 10 மீட்டர் வரை பிரிதிறனுடன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "India to launch Bhuvan in March 2009". சிலிக்கன் இந்தியா. 2008-11-23. http://www.siliconindia.com/shownews/India_to_launch_Bhuvan_in_March_2009-nid-50273.html. பார்த்த நாள்: 2008-11-23. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவன்&oldid=2742800" இலிருந்து மீள்விக்கப்பட்டது