புஷ்பா செந்தில் குமார்

இந்தியக் கூடைப்பந்தாட்ட வீராங்கனை

புஷ்பா செங்கல் குமார் (Pushpa Senthil Kumar)(பிறப்பு: செப்டம்பர் 18,2001) தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியக் கூடைப்பந்தாட்ட வீராங்கனையாவார்.

இளமை

தொகு

புஷ்பா, இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் இந்திய இரயில்வேயில் பணிபுரிகிறார். உள்நாட்டு போட்டிகளில் இரயில்வேக்காக விளையாடுகிறார்.[1]

தொழில்

தொகு

2017 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் அணியில் இடம்பெற்ற புஷ்பா, பன்னாட்டு கூடைப்பந்து கூட்ட்மைப்பின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் ஆசியப் போட்டிகளில் விளையாடினார்.[2] 2018 ஆம் ஆண்டில், அணியின் தலைவராக இருந்தார். மேலும், பன்னாட்டு கூடைப்பந்து கூட்டமைப்பு ஆசியாவில் சிறந்த வீரர்களின் பட்டியலில் இவரை 12வது இடத்தில் வைத்தது.[3]

2021 ஆம் ஆண்டில், மூத்தோர் தேசிய அணியில் இடம்பெற்று பன்னாட்டு கூடைப்பந்து கூட்ட்மைப்பின் மகளிர் ஆசிய கோப்பையில் விளையாடினார்.[2] சீனாவின் காங்சூ நகரில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றார்.[4] 2023 ஆம் ஆண்டில், மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் பன்னாட்டு கூடைப்பந்து கூட்ட்மைப்பின் ஆசியா 3x3 மகளிர் போட்டிகளில் விளையாடினார்.

2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட அமைப்பு லாஸ் ஏஞ்சலசில் ஏற்பாடு செய்த நான்காவது வருடாந்திர கூடைப்பந்து முகாமில் பங்கேற்க இந்தியாவிலிருந்து ஒரே பெண்ணாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pushpa SENTHIL KUMAR at the FIBA Women's Asia Cup Division A 2021". FIBA.basketball (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  2. 2.0 2.1 "Pushpa Senthil Kumar - Player Profile". FIBA.basketball (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.
  3. Sudarshan, N. (2018-10-27). "Asian Basketball Championship: India U-18 girls eye promotion". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  4. "Full list of Indian athletes for Asian Games 2023". Firstpost (in ஆங்கிலம்). 2023-08-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  5. PTI (2018-02-09). "Three Indians figure in NBA global camp". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_செந்தில்_குமார்&oldid=4110968" இலிருந்து மீள்விக்கப்பட்டது