பூக்குதிரை

பூக்குதிரை என்பது சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

குதிரையேறும் முறை

ஆடும் முறை

தொகு

பொத்தியாள் (நடுவர்) என்று ஒருவர் இருப்பார். பட்டவர் ஒருவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார். பட்டவர் ஆனவர் பொத்தியாளிடம் வந்து ஒரு பூவின் பெயரைச் சொல்லிவிட்டுக் குதிரையாகக் குனிந்து கைகளையும் முழங்கால்களையும் நிலத்தில் ஊன்றிக்கொண்டு நிற்பார். மற்றவர்கள் ஒவ்வொருவராகப் பொத்தியாளிடம் வந்து ஒரு பூவின் பெயரைச் சொல்லவேண்டும்.

அது பட்டவர் மறைவாகச் சொன்ன பூவின் பெயராக இல்லாவிட்டால் சொன்னவர் சிறிது தூரம் பட்டவர்மீது குதிரைச்சவாரி செய்யலாம். அவர் சொல்லும் பூவின் பெயர் பட்டவர் சொன்ன பூவின் பெயராகவோ, மற்றவர்கள் முன்பே கூறிய பூவின் பெயராகவோ இருந்தால் அந்தப் பூவின் பெயரைச் சொன்னவர் குனிந்து குதிரை ஆகவேண்டும்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், ,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்குதிரை&oldid=1017359" இலிருந்து மீள்விக்கப்பட்டது