பூங்கொடி (காப்பியம்)
பூங்கொடி என்பது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையைத் தழுவி தமிழியக்கக கருத்துக்களைச் சொல்லும் வகையில் கவியரசர் முடியரசன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பியம் ஆகும். கதைமாந்தர்கள், காதைப் பெயர்கள் உள்ளிட்ட பல மணிமேகலையோடு ஒத்துப் போகின்றன. மணிமேகலை 30 காதைகளில் அமைய, பூங்கொடி 31 காதைகளில் அமைந்துள்ளது.