முதன்மை பட்டியைத் திறக்கவும்

கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

இலக்கியப் பங்களிப்புகள்தொகு

வ.எண் நூல் ஆண்டு வடிவம் பதிப்பகம் குறிப்பு
01 முடியரசன் கவிதைகள் கவிதை 1954 ?
02 காவியப் பாவை கவிதை 1955 முத்துநிலையம், காரைக்குடி[1]
03 கவியரங்கில் முடியரசன் கவிதை 1960 ?
04 பூங்கொடி காப்பியம் 1964 ?
05 தமிழ் இலக்கணம் இலக்கணம் 1967 ?
06 வீரகாவியம் காப்பியம் 1970 ?
07 பாடுங் குயில்கள் கட்டுரைகள் 1975 ?
08 பாடுங்குயில் இசைப் பாடல் 1983 ?
09 ஊன்றுகோல் காப்பியம் 1983 ?
10 நெஞ்சு பொறுக்கவில்லையே கவிதை 1985 ?
11 மனிதனைத் தேடுகின்றேன் கவிதை 1986 ?
12 சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் வாழ்க்கை வரலாறு 1990 ?
13 தமிழ் முழக்கம் கவிதை 1999 ?
14 நெஞ்சிற் பூத்தவை கவிதை 1999 ?
15 ஞாயிறும் திங்களும் கவிதை 1999 ?
16 வள்ளுவர் கோட்டம் கவிதை 1999 ?
17 புதியதொரு விதி செய்வோம் கவிதை 1999 ?
18 எக்கோவின் காதல் சிறுகதை 1999 ?
19 அன்புள்ள பாண்டியனுக்கு கடிதம் 1999 ?
20 அன்புள்ள இளவரசனுக்கு கடிதம் 1999 ?
21 தாய்மொழி காப்போம் கவிதை 2000 ?
22 எப்படி வளரும் தமிழ்? கட்டுரை 2001 ?
23 மனிதரைக் கண்டு கொண்டேன் கவிதை 2005 ?
24 இளம்பெருவழுதி நாடகக் காப்பியம் 2008 ?
25 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் தன்வரலாறு 2008 ?

சிறப்புகள்தொகு

  • இவரது கவிதைகளைச் சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
  • பூங்கொடி என்ற காவியம் 1966-இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது.
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

உசாத்துணைதொகு

  • க. திருநாவுக்கரசு (1999) திராவிட இயக்கத் தூண்கள், நக்கீரன் பதிப்பகம், பக் 167-183
  • தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூல் பக்கம் - 144. (2011)
  • திராவிடநாடு (இதழ்) நாள்:16-10-1955, பக்கம் 15
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=முடியரசன்&oldid=2638004" இருந்து மீள்விக்கப்பட்டது