சுழியக் கழிவு

(பூச்சிய கழிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எல்லா உற்பத்தி நுகர்வுச் செயற்பாடுகளிலும் கழிவற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்க உந்துவிக்கும் ஓர் அணுகுமுறை சுழியக் கழிவு (Zero waste) என்று அழைக்கப்படும். இயற்கையில் எப்படி ஒரு செயல்பாட்டின் கழிவுகள் அல்லது விளைவுகள் இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக அமைகின்றதோ அதேபோல மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழ தகுந்த வழிகளில் பயன்பாட்டிற்கு ஏற்ற மாதிரி மீள் உருவாக்கம் , மீள் உபயோகம் செய்வது சுழிய கழிவின் அடிப்படை.

பல பொருட்கள் நுகர்வோர்களால் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் பின் கழிவு என கருதப்பட்டு எறியப்பட்டுவிடும். பொதுவாக பல பொருட்கள் கழிவுக் கிடங்குகளில் போடப்படுகின்றன. அவற்றுள் சில காலப்போக்கில் அழுகி, சிதைந்து அல்லது மருவி மண்ணோடு கலந்து விடுகின்றன. பல பொருட்கள் அப்படி மருவுவதில்லை; அவை, சூழல் மாசுறுத்தலுக்கு வழிகோலுகின்றன. இப்பொருட்களின் விலை இச்சூழல் மாசுறுதலை பொருட்படுத்தி அமைவதில்லை; இதுவே சூழல் மாசுறுதலுக்கு ஒரு முக்கிய காரணி. சுழிய கழிவு அணுகுமுறையின் மூலம் எந்த ஒரு பொருளையும் கழிவாக்காமல், அதன் உண்மையான பரந்த சூழல் தாக்கங்களை கருத்தில் எடுத்து, மீள்மீள் உருவாக்கத்துக்கும் ஏற்ற மாதிரி உற்பத்தி செய்ய முனையப்படும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழியக்_கழிவு&oldid=3817872" இலிருந்து மீள்விக்கப்பட்டது