பூச்சி அறிவியல் அருங்காட்சியகம்
பூச்சி அறிவியல் அருங்காட்சியகம் (Insect Science Museum)(பண்டைய சீனம்: 昆蟲科學博物館; எளிய சீனம்: 昆虫科学博物馆; பின்யின்: Kūnchóng Kēxué Bówùguǎn) என்பது தைவானின் தைபேயில் Zhongzheng மாவட்டத்தில் உள்ள பூச்சிகளின் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் செங் குங் மூத்த உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பூச்சி அறிவியல் அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.
昆蟲科學博物館 | |
நிறுவப்பட்டது | 1971 |
---|---|
அமைவிடம் | ஜாங்செங் மாவட்டம், தாய்பெய், தைவான் |
ஆள்கூற்று | 25°02′34″N 121°31′25″E / 25.04278°N 121.52361°E |
வகை | அருங்காட்சியகம் |
வரலாறு
தொகுபூச்சி அறிவியல் அருங்காட்சியகம் 1968-ல் கட்டப்பட்டது 1971-ல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
கண்காட்சிகள்
தொகுபூச்சி அறிவியல் அருங்காட்சியகத்தில் பூச்சிகளின் மாதிரிகள் பூச்சிகளின் பல்வேறு சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், அருங்காட்சியகத்தில் சுமார் 750 பெட்டிகள் மற்றும் கிட்டத்தட்ட 40,000 மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2][3]
போக்குவரத்து
தொகுதைபே மெற்றோவின் ஷாண்டாவோ கோயில் நிலையத்திலிருந்து தெற்கே நடந்து செல்லும் தூரத்தில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Insect Science Museum of the Taipei Chenggong High School". Undiscovered Taipei. 18 November 2021. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Insect Science Museum of the Taipei Chenggong High School". Taiwan Medical Travel. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Insect Science Museum of the Taipei Chenggong High School". பார்க்கப்பட்ட நாள் 6 February 2014.