பூட்டானில் விளையாட்டு
பூட்டானின் விளையாட்டுத் துறை (Sports in Bhutan ) பாரம்பரிய பூட்டானிய விளையாட்டுகள் மற்றும் நவீன சர்வதேச விளையாட்டுகள் ஆகிய இரண்டு வகைகளை உள்ளடக்கியது ஆகும். வில்வித்தை பூட்டானின் தேசிய விளையாட்டாக விளையாடப்படுகிறது. இப்போட்டிகள் நாடுமுழுவதிலும் உள்ள பெரும்பாலான கிராமங்களில் நடத்தப்படுகின்றன.[1][2][3] குரு, சோக்சம், புண்டோ மற்றும் திகோர் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகள் பூட்டானின் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும்.
சர்வதேச விளையாட்டுகள் நவீன பூட்டானில் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளன. கால்பந்தாட்டம் பூட்டானில் மிகவும் பிரபலமாகியுள்ளது. பூட்டானியர்கள் கால்பந்தாட்டத்தை உள்விளையாட்டரங்கில் புட்சால் என்ற பெயரிலும் விளையாடுகின்றனர். இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் தாக்கத்தால் துடுப்பாட்டப் போட்டிகளும் பூட்டானில் பிரபலமாகி வருகின்றன.
பாரம்பரிய விளையாட்டுகள்
தொகுபாரம்பரிய பூட்டானிய விளையாட்டில் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பது வில்வித்தையாகும். பூட்டானின் பாரம்பரிய வில்வித்தையானது அம்மக்களின் மத நம்பிக்கைகளுடன் இரண்டற கலந்து சடங்குகளுக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும் மற்றும் தற்காலப் புகழ் மற்றும் செல்வாக்கிற்காகவும் திருவிழாக்கள் மற்றும் போட்டிகளில் விளையாடப்படுகிறது. விதிமுறைகள் மற்றும் அளவீட்டு முறைகளில் பூட்டானின் வில்வித்தையானது, அனைத்துலக வில்வித்தை விளையாட்டிலிருந்து வேறுபடுகிறது. மிகச்சிறிய பொருளை அதிகத் தொலைவில் இருந்து வீழ்த்துவது என்ற நோக்கம் இந்நாட்டு வில்வித்தை விளையாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் பூட்டான் சர்வதேச வில்வித்தைப் போ ட்டிகளிலும் போட்டியிடுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளும் பூட்டானில் இருக்கின்றன.
குரு என்பது பூட்டானில் விளையாடப்படும் பாரம்பரிய வில்வித்தை போன்ற ஒரு பழங்குடி எறி விளையாட்டாகும். இவ்விளையாட்டிலும் வீரர்கள் மிகத் தொலைவில் இருந்து மிகவும் சிறிய பொருட்களை எறிந்து வீழ்த்த வேண்டும். குறிப்பாக திருவிழாக் காலங்களில் ஈட்டி எறிதல் விளையாட்டைப் போன்ற சோக்சம், திகோர், குண்டு எறிதல் விளையாட்டைப் போன்ற புண்டோ போன்ற விளையாட்டுகளுடன் குரு விளையாட்டும் விளையாடப்படுவது வழக்கமாகும்.
வில்வித்தை
தொகுவில்வித்தை பூட்டானின் தேசிய விளையாட்டு என்பதால், பூட்டான் வில்வித்தை கூட்டமைப்பு என்ற நிறுவனம் நாட்டில் இவ்விளையாட்டை ஒழுங்குபடுத்துகிறது[4] பாரம்பரிய பூட்டான் வில்வித்தை விளையாட்டின் விதிமுறைகள் ஒலிம்பிக் வில்வித்தையின் தரங்கள், நுட்பங்கள், இலக்கை வைக்கும் இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் ஆகிய கூறுகளில் வேறுபடுகிறது. வீழ்த்தப்பட வேண்டிய இலக்கானது 130 [5]மீட்டர் தொலைவில் (430 அடி) வைக்கப்படுகின்றது. 3 அடி உயரமும் 11 அங்குல அகலமும் [3] கொண்ட இவ்விலக்கு மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பிரகாசமாக வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய மரத்துண்டாகும். இலக்கின் மையப்புள்ளி கர்ரே எனப்படுகிறது[6]. பாரம்பரிய பூட்டானிய விற்கள் மூங்கிலால் செய்யப்பட்டன. அம்புகள் மூங்கில் அல்லது நாணலுடன் இற்குகள் இணைத்துச் செய்யப்பட்டிருந்தன. நன்றாக வண்ணம் தீட்டப்பட்ட இவற்றின் முனைகள் உலோகத்தில் முக்கியெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தன. அம்புகள் வைப்பதற்கான அம்பறாத் துணி மரத்தால் செய்யப்பட்டு விலங்குகளின் தோல் அல்லது சணல்வகை வலைகளால் செய்யப்பட்டிருந்தது[3][5]
பூட்டானிய வில்வித்தை அணியில் 13 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு அணியும் அவர்கள் முறை வரும்போது ஒரேசமயத்தில் இரண்டு அம்புகளை செலுத்த வேண்டும் முதல் அம்பை ஒரு திசையிலும் மற்றொரு அம்பை வேறொரு திசையிலும் செலுத்த வேண்டும். எந்த அணி முதலில் 25 புள்ளிகளை ஈட்டுகிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்கும் மதிப்பீட்டு முறை சிக்கல் நிறைந்ததாகவும் நீண்ட நேரத்தையும் எடுத்துக் கொள்வதாக இருக்கிறது[3]. ஏனெனில், இரண்டாவதாக அம்பு செலுத்துபவர், முதலாவதாக விளையாடியவரை விட அதிக புள்ளிகளை ஈட்டி முந்திவிடுவார்[2] இத்தொடர்கதை மாதக்கணக்கில் கூட நீடிப்பது உண்டு. நவீன வில்வித்தைப் போட்டிகள் சில நாட்களில் முடிந்து விடக் கூடியதாக இருக்கிறது[3].
பாரம்பரிய பூட்டான் வில்வித்தைப் போட்டிகளும்கூட நாளுக்குநாள் நவீனமயமாகி வருகின்றன. பன்னோக்கு விற்கள், பெருநிறுவனங்களின் நிதியுதவி, அதிக பணம் மற்றும் பொருள்களைப் பரிசாக வழங்குதல்[7][8][9]காயங்கள், எப்போதாவது நிகழும் உயிரிழப்புகள்[10]ஆகிய அனைத்துப் பிரிவுகளும் கவனிக்கப்படுகின்றன. வீரர்கள் ஊக்க மருந்து உட்கொள்ளுதல், மது அருந்துதல் [8] ஆகியனவும் விளையாட்டு விதிகளில் சேர்க்கப்படும் அளவிற்கு கவனம் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bisht, Ramesh Chandra. International Encyclopaedia Of Himalayas. Mittal Publications. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-265-0. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
- ↑ 2.0 2.1 Rennie, Frank; Mason, Robin (2008). "12: The Metaphorical World of Archery, Karma Pedey". Bhutan: Ways of Knowing. IAP. pp. 95–103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59311-735-3. பார்க்கப்பட்ட நாள் 2011-09-25.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Carpenter, Russell B.; Carpenter, Blyth C. (2002). The Blessings of Bhutan. University of Hawaii Press. pp. 3, 21–24, 36, 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-2679-5. பார்க்கப்பட்ட நாள் 2011-09-25.
- ↑ Prince Claus Fund, Bhutan Archery Federation profile பரணிடப்பட்டது 2013-04-15 at Archive.today
- ↑ 5.0 5.1 Grayson, Charles E.; French, Mary; O'Brien, Michael John (2007). Traditional Archery from Six Continents: the Charles E. Grayson Collection. University of Missouri Press. pp. 97, 103–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8262-1751-6. பார்க்கப்பட்ட நாள் 2011-09-25.
- ↑ Wangdi, Nima (2011-08-19). "18 Karay in 15 Rounds". Kuensel online. பார்க்கப்பட்ட நாள் 2011-09-19.
- ↑ Palden, Karma (2011-09-30). "Paro Archery Underway". Bhutan Observer online. Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ 8.0 8.1 Wangchuk, Jigme (2010-12-15). "Let Sports Be Clean and Fair". Bhutan Observer online. Archived from the original on 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2011-09-19.
- ↑ "Royal Wedding Archery". Kuensel online. 2011-10-28. Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2011-10-29.
- ↑ "The Dear National Game". Bhutan Observer online. 2010-09-10. Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-19.