பூட்டான் சுதந்திரம்

பூட்டான் (Bhutan) வரலாற்றில் பெரும்பகுதி முழுவதும் சுதந்திரமாக இருந்த சில நாடுகளில் ஒன்றாகும்.

பூட்டானின் தேசியக் கொடி

பூட்டான் சுதந்திரம் தொகு

பூட்டானின் பெரும்பகுதி எப்பொழுதும் பிறிதொரு வெளிப்புற சக்தியால் கைப்பற்றப்படவோ, ஆக்கிரமிக்கப்படவோ அல்லது நிர்வகிக்கப்படவோ இல்லை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

காமரூப இராச்சியம் (Kamarupa Kingdom) அல்லது திபெத்திய (Tibetan Empire) சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆளப்பட்டதாக ஊகிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான சூழ்நிலை ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. அப்பெருமை மிக்க வரலாற்றைக் கொண்ட அந்த நாடு முழுவதும் தொடர்ந்து அதன் இறையாண்மையை பாதுகாத்து வருகிறது. [1][2]

சுதந்திர தினம் இல்லாத நாடு தொகு

 
பூட்டானின் தேசிய விலங்கு

இந்நாடு இதுவரை யாருடைய ஆட்சியின் கீழும் இல்லாமையால், பூட்டானில் சுதந்திர தினம் இல்லை. இருப்பினும், 1910 ஆம் ஆண்டில் புனாகா (Treaty of Punakha) ஒப்பந்தத்தின் கீழ், பூட்டான் அரசியல் சுயாட்சிக்காக ஆங்கில அரசாங்கத்தின் மேலாதிக்கத்தை அங்கீகரித்தது.

இந்தியா பூட்டான் உறவு தொகு

 
பூட்டானின் தேசிய மரம்

1949 இல், பூட்டான் இந்தியாவின் நட்பு உடன்படிக்கை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அதன்படி பூட்டானுக்கு இந்தியா வெளியுறவு கொள்கையில் வழிகாட்ட அனுமதித்தது. [3] இந்த ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நீக்கப்பட்டது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Rose, Leo E. (1977). The Politics of Bhutan. Ithaca: Cornell University Press. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-0909-8. https://archive.org/details/politicsofbhutan00rose. "[T]here can be no doubt that since at least the tenth century no external power has controlled Bhutan, although there have been periods when various of its neighbors have been able to exert a strong cultural and/or political influence there." 
  2. Michael Aris (2005). The Raven Crown: The Origins of Buddhist Monarchy in Bhutan. Chicago: Serindia Publications. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-932476-21-0. "peripheral to the great empire of power and faith [i.e., Tibet], yet never subjugated to it." 
  3. Indo-Bhutanese relations
  4. Sudha Ramachandran (January 17, 2007). "India, Bhutan: No more unequal treaties". Asia Times. Archived from the original on ஜூன் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் March 2, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_சுதந்திரம்&oldid=3581584" இலிருந்து மீள்விக்கப்பட்டது