பூட்டான் துடுப்பாட்ட அணி
பூட்டான் தேசிய துடுப்பாட்ட அணி (தி டிராகன்ஸ் அணி) சர்வதேச கிரிக்கெட்டில் பூட்டான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும்.
இந்த அணி பூட்டான் கிரிக்கெட் கவுன்சில் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது 2001 இல் [1] சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுப்பினராக ஆனது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்திருந்த வளரும் நாடுகளுக்கான துடுப்பாட்ட தொடரில் பூட்டான் சர்வதேச அளவில் துடுப்பாட்டத்தில் அறிமுகமானது.[2]
விளையாடிய தொடர்கள்
தொகுஉலக துடுப்பாட்ட தொடர்
தொகு- 2010 எட்டாம் பிரிவு : 7 வது இடம்
- 2012 எட்டாம் பிரிவு : 8 வது இடம்
ஏசிசி டிராபி
தொகு- 2004: கால் இறுதி வரை முன்னேறியது
- 2006 : 13 வது இடம்
- 2010 எலைட் : 8 வது இடம்
ஏசிசி டிராபி சேலஞ்ச்
தொகு- 2009 : 2 வது இடம் [3]
சாதனைகள்
தொகுதனி நபர் அதிகபட்சம்
தொகு- சுப்பிரித் பிரதான் - 82 vs சூரினாம், 22 செப்டம்பர் 2012 இல்.
- மனோஜ் அதிகாரி - 61 vs சூரினாம், நவம்பர் 7, 2010 இல்.
- மனோஜ் அதிகாரி - 58 vs பஹாமாஸ், நவம்பர் 12, 2010 இல்.
சிறந்த தனி நபர் பந்துவீச்சு
தொகு- டோர்ஜி லோடே - 6/17 vs பர்மா, 17 ஜனவரி 2009
- டென்சின் வாங்சக் - 6/73 vs சிங்கப்பூர், 10 ஜூன் 2014
- ஜிக்மே சிங்யே - 5/23 vs பஹாமாஸ், 12 நவம்பர் 2010
குறிப்புகள்
தொகு- ↑ Country: Bhutan – CricketArchive. Retrieved 4 September 2015.
- ↑ Other matches played by Bhutan பரணிடப்பட்டது 2019-05-31 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 4 September 2015.
- ↑ [1]