பூண்டி தொடருந்து நிலையம்

இந்தியாவின் ஆந்திரப்பிரதேச தொடருந்து நிலையம்


பூண்டி தொடருந்து நிலையம் (Pundi railway station) (நிலையக் குறியீடு: PUN) [1] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நிலையம் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பூண்டி, வச்ரபுகோட்டுரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேவை செய்கிறது.

பூண்டி
Pundi
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பூண்டி, சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்18°39′54″N 84°22′14″E / 18.665109°N 84.370624°E / 18.665109; 84.370624
ஏற்றம்48 m (157 அடி)
தடங்கள்குர்தா சாலை-விசாகப்பட்டினம் பிரிவு of
அவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPUN
மண்டலம்(கள்) தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலம்

வச்ரபுகொட்டூரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்நிலையம் ஒரு முக்கிய மையமாக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

வசதிகள்

தொகு

பூண்டி தொடருந்து நிலையத்தில் முதல் வகுப்பு காத்திருப்பு கூடம், கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு அலுவலகங்கள், இரண்டாம் வகுப்பு காத்திருப்பு அறை, நடைபாலம் மற்றும் பொது முகவரி அமைப்பு போன்ற வசதிகள் உள்ளன. கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு அலுவலகம் காலை 08:00 மணி முதல் 20:00 மணி வரை செயல்படுகிறது. [2]

பூண்டி இரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Station Code Index" (PDF). Indian Railways Info. p. 2. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  2. "Amenities" (WEB). Native Planet. p. 2. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.