பூண்டு முடிச்சு

பூண்டு முடிச்சுகள் (Garlic knots) என்று அழைக்கப்படும் உணவு, பூண்டு உரொட்டியின் வகையாகும். அமெரிக்க நாட்டின் நியூயார்க்கு நகரின் பீத்சாக்கடைகளில்(Pizzeria) இது முதன்மையான விற்பனை உணவு ஆகும். அதைச்சுற்றியுள்ள நகரிலும் அதிகம் விற்பனையாகும் உணவு ஆகும். 1940 ஆம் ஆண்டில் புரூக்ளின் நகரில் இது தோன்றியது என்பர். பல பீத்சா கடைக்காரர்கள், தாங்களே இதன் மூதாதையர் எனக் கூறிக்கொள்கின்றனர்.[1]

பூண்டு முடிச்சுகள்
வகைபூண்டு உரொட்டி
முக்கிய சேர்பொருட்கள்பீத்சாவின் பிசைந்த மாவு, வெள்ளைப்பூண்டு, parmesan பாலாடைக்கட்டி
பிரட்டுச் சட்டியில் பூண்டு முடிச்சுகள்

தயாரித்தல்

தொகு

பீத்சாவின் பிசைந்த மாவிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. உருட்டப்பட்ட இம்மாவானது சிறுசிறு உருண்டையாகப் பிடிக்கப்படுகிறது, ஒவ்வொரு உருண்டையின் மேலும் முடிச்சு போல அமைக்கப்படுகிறது. பின்பு, இம்முடிச்சு உருண்டைகள் 700 °F அல்லது அதற்கு மேலுமுள்ள வெப்பத்தில் பீத்சா அடுப்பில் வேக வைக்கப்படுகின்றன.. பின்பு, இம்முடிச்சுகள் மீது எண்ணெய் பூசப்படுகிறது. பர்மேசன் பாலாடைக்கட்டி (Parmesan cheese), நசுக்கப்பட்ட பூண்டு போன்றவை தூவப்படுகின்றன; சில நேரங்களில் பா்சுலே (parsley) கீரை மிகச்சிறு துண்டு தூவல்கள், உலர்ந்த ஓரிகானோ (oregano) அல்லது மிளகு தூவிப்பட்டும் தரப்படுகிறது. இரண்டாம் முறையும் பீத்சா அடுப்பில் வேக வைக்கப்பட்டு உடன் மரினாரா குழம்பும் (marinara sauce) தரப்படுவதுண்டு.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Delicious Homemade Pizza Start to Finish: Pizzas, Calzones, Pizza Rolls, and Garlic Knots. Tom Carroll, Ben Carroll. 117 pag. ASIN: B07XJGJHWS
  2. Gourmet Italian: All-Time Favorite Recipes- 2012 - Gourmet Magazine- 192 pag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0547843682, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0547843681
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_முடிச்சு&oldid=3918095" இலிருந்து மீள்விக்கப்பட்டது