பூண்டு உரொட்டி

பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் ரொட்டி வகை


பூண்டு ரொட்டி என்பது பூண்டைத் தூவி அல்லது அதன் சாற்றை ஊற்றி, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இட்டு தயாரிக்கப்படும் ஒருவகை பகெத்தாகும். ஆர்கனோ மற்றும் இனப்பூண்டும் பயன்படலாம். சுடப்பட்டோ பொறிக்கப்பட்டோ வறுக்கப்பட்டோ இது பரிமாறப்படுகிறது.[1][2]

பூண்டு ரொட்டி
பூண்டு ரொட்டி
வகைஉரொட்டி
பரிமாறப்படும் வெப்பநிலைசேருணவு
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாகவும் குளிர்மையாகவும் இதமாகவும்
முக்கிய சேர்பொருட்கள்பகெத், பூண்டு, ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய்
பாலாடைக்கட்டி பூசிய பூண்டு ரொட்டி

தயாரிப்பு

தொகு

அரைவேக்காடாய் சுடப்பட்ட பகெத்தை பிரித்து அதில் துருவிய, மசக்கிய அல்லது பொடிப்பட்ட பூண்டைச் சேர்த்து ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு மூடி, சுடப்பட்டோ பொறிக்கப்பட்டோ வறுக்கப்பட்டோ பூண்டு ரொட்டி பரிமாறப்படுகிறது. பூண்டு பீட்சா உள்ளிட்ட உணவுகளுக்கும் இது அடிப்படையாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தயாாரிக்கப்படும் பூண்டு ரொட்டி இத்தாலியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "அமெரிக்கன் குக்புக் - கூகுள் புக்ஸ்".
  2. "லிடியாஸ் இத்தாலி இன் அமெரிக்கா - கூகுள் புக்ஸ்".
  3. "இத்தாலியின் பூண்டு ரொட்டி - நியூ ஆர்க் டைம்ஸ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_உரொட்டி&oldid=3916333" இலிருந்து மீள்விக்கப்பட்டது