பகெத்
பகெத் என்பது பிரான்சில் தோன்றிய நீளமான ஒல்லியான ரொட்டியாகும். மொறுமொறுப்பான சுவையினால் இது தனித்துவம் பெற்றது.[1]
மாற்றுப் பெயர்கள் | ஃப்ரென்ச் ஸ்ட்டிக் |
---|---|
வகை | ரொட்டி |
பரிமாறப்படும் வெப்பநிலை | முதன்மை உணவு |
தொடங்கிய இடம் | பிரான்ஸ்[2] |
முக்கிய சேர்பொருட்கள் | மாவு , நீர் , நொதியம் , உப்பு |
263 கலோரி (1101 kJ) |
தயாரிப்பு
தொகுபொதுவாக 5-6 செ.மீ விட்டமும் 65 செ.மீ நீளமும் கொண்ட பகெத், கோதுமை மாவு, நீர், நொதியம் மற்றும் உப்பு ஆகிய பொருட்களினால் தயாரிக்கப்படுகிறது. இது பேட்டன் (தடி), ஃபிசெல் (நூல்) ஆகிய அடைமொழிகள் கொண்டும் அழைக்கப்படுகிறது. இது 100 கிராம் முதல் 250 கிராம் வரை கனக்கும். 100 கிராம் எடையுள்ள பகெத் ஃபிசெல் என்றும் 250 கிராம் எடையுள்ள பகெத் பேட்டன் என்றும் அழைக்கப்பெறுகிறது. பகெத்தின் அதிகபட்ச நீளம் சுமார் ஒரு மீட்டர் ஆகும். [3][4]
பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து பகெத்துகள் செய்யப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. சான்விச்சுகளாகவோ பழக்கூழ் உள்ளிட்ட சேர்க்கைகளுடனோ இது பரிமாறப்படுகிறது. சூடான சாக்லேட்டோடு இது பரிமாறப்படும் போது இதை டார்ட்டைன்ஸ் என்று அழைக்கிறார்கள்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பகெத் பற்றிய விவரங்கள் - லெஜி பிரான்ஸ்".
- ↑ https://www.discoverwalks.com/blog/the-all-important-history-of-the-baguette/
- ↑ "பிரெஞ்சு ஸ்ட்டிக் - டிக்ஷனரி".
- ↑ "ரொட்டிகளின் தகவல்கள் - பிரெஞ்சு டிசையர்". Archived from the original on 2021-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
- ↑ "பகெத்தின் தோற்றம் - செசிம்".