சான்விச் அல்லது சாண்டுவிச் ( ரொட்டி பூரண அடுக்கு ) என்பது பாண் துண்டுகளுக்கு இடையே இதர உணவுப் பொருட்களை வைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். சான்விச்சை எளிமையாக, வேகமாக ஆக்கலாம். இடையே முட்டைக்கோசு (lettece), தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்ற மரக்கறிகள், பால்திரளி (cheese) அல்லது வெண்ணெய், இறைச்சிகள், சுவைக் கலவைகள், மிளகு உப்பு போன்ற சுவைப்பொருட்களை இடலாம். மேற்குநாடுகளில் சான்விச் பெரிதும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்விச்&oldid=3476663" இலிருந்து மீள்விக்கப்பட்டது