பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பூதலிங்கசுவாமி கோயில் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டியில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1]

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து வடக்கே 10 கி.மீ தொலைவில் பழையாற்றின் மேற்குக் கரையில் தாடகை மலையின் அடிவாரத்தில் உள்ளது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. [1] சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்கின்றனர். [1]

சந்நிதிகள்

தொகு

இக்கோயிலில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் சிவகாமியம்மை. உள்பிரகாரத்தில் விநாயகர், முருகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் முதலிய சன்னிதிகள் உள்ளன.

அமைப்பு

தொகு

மூலஸ்தானம் அமைந்துள்ள பாறையைச் சுற்றிலும் எழுப்பட்டிருக்கும் கற்சுவர் ஒரு சிறிய கோட்டையின் தோற்றத்தை கொண்டிருக்கும். கோயிலின் வடக்கே திருக்குளம் உள்ளது. இவ்வாலயத்திற்கு விமானம் இல்லை. செட்டி மண்டபத்தில் இரு துவாரகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்

தொகு
  • பௌர்ணமி விசேச பூஜை
  • பிரதோஷ வழிபாடு
  • அமாவசை கிரிவலம் [1]
  • தைமாதத்தில் பிரமோற்சவம்
  • ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 மலர், மாலை (3 டிச., 2021). "பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில்- கன்னியாகுமரி". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)