பூத்தையல் என்பது வண்ண நூல்கள், இழைகள் , சரடுகள் மற்றும் தைக்கும் ஊசியுடன் உதவியுடன் ஆடைகளில் போடுவது ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த முறையில் தான் பூத்தையல்கள் கையால் போடப்படுகின்றன.

வரலாறு தொகு

சுமார் கி.மு.30,000ஆண்டுகளுக்கு முன்பாகவே பூத்தையல்கள் நடைமுறையில் இருந்தது. அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அடர்த்தியாக பூத்தையல் போடப் பட்ட ஆடைகள், தொப்பிகள் மற்றும் காலணிகள் புதைபடிமங்களாகக் கிடைத்தன. இவற்றிலிருந்து பூத்தையல் உலகம் தோன்றிய காலங்களில் இருந்தே உள்ளது என அறியலாம்.

பிறப்பிடம் தொகு

சைபீரியாவில் கி.மு. 5000 – 6000 இடைபட்ட காலத்தில் உள்ள சில பூத்தையல் செய்யப் பட்ட சிப்பிகள் கண்டுபிடிக்கப் பட்டன. இவைகளில் ஓட்டையிடப் பட்டு அவைகளில் தோலில் சேர்த்து தைக்கப் பட்டு இருக்கும். சீனாவில் பூத்தையல் கி.மு. 3500 வருடத்திற்கு முந்தையது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட படங்களில் சித்தரிக்கப் பட்ட ஆடைகளில் பட்டு நூல்கள், முத்து மற்றும் விலையுயர்ந்த கற்களைக் கொண்டு நெய்யப் பட்டுள்ளன. சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட பூத்தையல் ‘’’ வாரிங் ஸ்டேட்ஸ்’’’ காலத்தையது.

வளர்ச்சி நிலை தொகு

பூத்தையல் மற்றும் ஊசி கொண்டு செய்யப் கைவேலைகள் எல்லாம் மத்திய கீழை நாடுகளைச் சேர்ந்தது. ஆதி மனிதன் விலங்குகளின் தோல்களைத் தைத்து ஆடைகளாக நெய்யும் போது அவனுக்கு தோன்றிய எண்ணத்தின் வடிவமே பூத்தையல். பழங்காலத்தில் எழுதப்பட்ட வரலாறு, வடிக்கப் பட்ட சிலைகள், வரையப் பட்ட ஓவியங்கள் மற்றும் அலங்கார குவளைகள் அனைத்தும் பூத்தையலைச் சித்தரிக்கின்றன. 1100களில் மத புத்தகங்களை அலங்கரித்த தையல், 1200 மற்றும் 1300 களில் ஆடைகளில் தைக்கப் பட்டது.கி.பி 1500 களில் ஐரோப்பா முழுவதும் பரவியது. 1700 களில் பாசி, வர்ண் நூலில் செய்யப்பட்ட பூத்தையலும் உலகமெங்கும் பிரபலமானது. மத நூல்கள் மற்றும் வீட்டு உபயோகச் சாமான்கள் தவிர அவர்களிடம் உள்ள பூத்தையல் ஆடைகளும் மக்களின் தரத்தை கூறுவதாக இருந்தது. சந்ததி சந்ததியாக இந்த கலைகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வந்தது. பத்தொன்பாவது நூற்றாண்டுகளில் இயந்திரங்கள் மூலம் உருவாக்கப் படும் தையல் புகழ்ச்சி அடைந்து. இத்தையல் அதற்கு உபயோகப் படும் துணி மற்றும் நூல்கள் இடத்திற்கு இடம் மாறு படும். பல வகையான பூத்தையல்கள் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூத்தையல்&oldid=3506840" இலிருந்து மீள்விக்கப்பட்டது