பூனம் யாதவ்

பூனம் யாதவ் (9 ஜூலை 1995) இந்திய பாரம் தூக்குதல் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுக்களில் 63 கிலோ பெண்கள் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் நைஜீரியாவின் ஒலவடோயின் அடேசன்மியால் தங்கப்பதக்கம் வென்றார்.[1] ஆனால்ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

பூனம் யாதவ்
தனிநபர் தகவல்
இயற் பெயர்पूनम यादव
தேசியம்இந்தியர்
பிறப்பு9 சூலை 1995 (1995-07-09) (அகவை 28)
வாரணாசி, உத்தரப்பிரதேசம், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)63 kg
பல்கலைக்கழகம் அணிகாசி வித்யாபீத், வாரணாசி
27 ஜீலை 2014 இற்றைப்படுத்தியது.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சிறு விவசாயியின் மகளான பூனம் உத்தரப்பிரதேசம் பெனாரஸ் கிராமத்தில் தனது பெற்றோருக்கு உதவியாக வளர்ந்தார். சர்வதேச பளுதூக்குபவராக மாறுவதற்கான மூன்று வருட காலத் தீவிர பயிற்சிக்குப் பிறகு, 2014 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றபோது, இப்போட்டியில் கலந்துகொள்ள ஆகும் செலவிற்காக போதிய நிதி இல்லாமல் இவரது குடும்ப வாழ்வாதாரமாக வளர்த்த குடும்ப எருமை மாட்டை விற்றனர்.[2] இவரது பக்தி மற்றும் விடா முயற்சியின் காரணமாக வெற்றியின் உச்சத்தை எட்டினார். இவர் தனது பட்டப்படிப்பினை வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த காசி வித்யா பீடத்தில் கற்றார்.

தொழில் தொகு

பெண்கள் 69 கிலோ எடைப் பிரிவில் 2018 பொதுநலவாயப விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 222 கிலோ: ஸ்னாட்சில் 100 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 122 கிலோ தூக்கித் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2014 காமன்வெல்த் போட்டியில் 202 கிலோ எடையினை; 88 கிலோ எடை தூக்குதல் மற்றும் 114 கிளீன் அண்ட் செர்க்கில் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Glasgow 2014 - Women's 63kg Group A". results.glasgow2014.com. Archived from the original on 2014-07-29. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
  2. "Her Farmer Father Sold Their Buffalo So Punam Yadav Could Win Gold For India". 2018-04-10. https://www.thebetterindia.com/137328/cwg-2018-gold-punam-yadav/. 
  3. "Weightlifting Start List Package". www.iwf.net/. 2014-07-22. http://www.iwf.net/wp-content/uploads/downloads/2014/07/CG2014_Startlist_Package_v1.0.pdf. பார்த்த நாள்: 2021-01-05. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_யாதவ்&oldid=3716001" இலிருந்து மீள்விக்கப்பட்டது