2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2018 Commonwealth Games) 2018 ஏப்ரல் 4 முதல் 2018 ஏப்ரல் 15 வரை ஆத்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்ட் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு செயிண்ட் கிட்சின் தலைநகர் பாசெட்டெரேயில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2] ஆத்திரேலியா பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்தியது இது ஐந்தாவது முறையாகும். முதற் தடவையாக ஒரு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என சம அளவில் விளயாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

XXI பொதுநலவாய விளையாட்டுக்கள்
XXI Commonwealth Games
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள் XXI Commonwealth Games
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள்
XXI Commonwealth Games
2018 பொதுநலவாய விளையாட்டுகளின் சின்னம்
நிகழ் நகரம்கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து
குறிக்கோள்கனவுகளை பகிருங்கள்
பங்குபெறும் நாடுகள்71 பொதுநலவாய நாடுகள்
நிகழ்வுகள்19 விளையாட்டுகளில் 275
துவக்கவிழா4 ஏப்ரல் 2018
இறுதி விழா15 ஏப்ரல் 2018
Officially opened byசார்லசு, வேல்சு இளவரசர்
Athlete's Oathகரென் மர்பி
Queen's Baton Final Runnerசலி பியர்சன்
முதன்மை விளையாட்டரங்கம்கராரா விளையாட்டரங்கம்
இணையதளம்GC2018.com

பங்குபற்றும் அணிகள் தொகு

2018 பொதுநலவாய விளையாட்டுகளில் 71 நாடுகள் போட்டியிடுகின்றன.[3] மாலைத்தீவுகள் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது, ஆனால் 2016 அக்டோபரில் அந்நாடு பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[4] 2018 மார்ச் 31 இல் காம்பியா பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டதை அடுத்து போட்டிகளில் பங்குபற்றுகிறது.[5]

 
2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடுகள்
பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள்: நாட்டின் பெயர் (போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை)

நாடுகள் வாரியாகப் போட்டியாளர்களின் எண்ணிக்கை தொகு

விளையாட்டுக்கள் தொகு

பொதுநலவாய கட்டுப்பாட்டு அமைப்பின் நிருவாகத்தின் கீழ் 26 விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடிப்படையான 10 விளையாட்டுகள், ஆகக் கூடியது 17 விளையாட்டுகள் எந்த ஒரு பொதுநலவாய விளையாட்டுகளிலும் விளையாடப்படலாம். 10 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள்: தடகளம், இறகுப்பந்தாட்டம், குத்துச்சண்டை, வளைதடி, புற்றரை பந்துருட்டல், வலைப் பந்தாட்டம் (பெண்கள்), எழுவர் ரக்பி, சுவர்ப்பந்து, நீச்சல், பாரம் தூக்குதல் ஆகியனவாகும். நீச்சல், தடகளம், மிதிவண்டி ஓட்டம், மேசைப்பந்தாட்டம், பாரம் தூக்குதல், புற்றரைப் பந்துருட்டல் ஆகிய 9 விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளருக்கான போட்டிகள் இடம்பெற்றன.[6] கடற்கரை கைப்பந்தாட்டம் 18வது விளையாட்டாக 2016 மார்ச் 8 இல் அறிவிக்கப்பட்டது.[7]

பெரும்பாலும் 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்றே விளையாட்டுகள் நடைபெற்றன. யுடோ இம்முறை நடைபெறவில்லை. ஆனால், கூடைப்பந்தாட்டம், மற்றும் பெண்களுக்கான எழுவர் ரக்பி, கடற்கரை கைப்பந்தாட்டம் ஆகியன சேர்த்துக்கொள்ளப்பட்டன.[8]

பெண்களுக்கு ஏழு புதிய விளயாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இதனால், பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான அளவில் விளயாட்டுகள் நடைபெற்றன. முக்கிய பல்துறை விளையாட்டுப் போட்டி ஒன்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். மொத்தம் 18 வகை விளையாட்டுகளில் 275 போட்டிகள் இடம்பெற்றன.[9][10]

பதக்க நிலவரம் தொகு

  *   நடத்தும் நாடு (ஆத்திரேலியா)

 நிலை  அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஆத்திரேலியா* 80 59 59 198
2   இங்கிலாந்து 45 45 46 136
3   இந்தியா 26 20 20 66
4   கனடா 15 40 27 82
5   நியூசிலாந்து 15 16 15 46
6   தென்னாப்பிரிக்கா 13 11 13 37
7   வேல்சு 10 12 14 36
8   இசுக்காட்லாந்து 9 13 22 44
9   நைஜீரியா 9 9 6 24
10   சைப்பிரசு 8 1 5 14
11   ஜமேக்கா 7 9 11 27
12   மலேசியா 7 5 12 24
13   சிங்கப்பூர் 5 2 2 9
14   கென்யா 4 7 6 17
15   உகாண்டா 3 1 2 6
16   போட்சுவானா 3 1 1 5
17   சமோவா 2 3 0 5
18   டிரினிடாட் மற்றும் டொபாகோ 2 1 0 3
19   நமீபியா 2 0 0 2
20   வட அயர்லாந்து 1 7 4 12
21   பஹமாஸ் 1 3 0 4
22   பப்புவா நியூ கினி 1 2 0 3
23   பிஜி 1 1 2 4
24   பாக்கித்தான் 1 0 4 5
25   கிரெனடா 1 0 1 2
26   பெர்முடா 1 0 0 1
  கயானா 1 0 0 1
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 1 0 0 1
  செயிண்ட். லூசியா 1 0 0 1
30   வங்காளதேசம் 0 2 0 2
31   இலங்கை 0 1 5 6
32   கமரூன் 0 1 2 3
33   டொமினிக்கா 0 1 1 2
34   மாண் தீவு 0 1 0 1
  மொரிசியசு 0 1 0 1
  நவூரு 0 1 0 1
37   மால்ட்டா 0 0 2 2
  வனுவாட்டு 0 0 2 2
39   குக் தீவுகள் 0 0 1 1
  கானா 0 0 1 1
  நோர்போக் தீவு 0 0 1 1
  சீசெல்சு 0 0 1 1
  சொலமன் தீவுகள் 0 0 1 1
மொத்தம் (43 அணிகள்) 275 276 289 840[11]

முதல் வெற்றிகள் தொகு

 • சொலமன் தீவுகள் தனது முதலாவது பொதுநலவாய பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 58 கிகி பாரம் தூக்குதலில் பெண்கள் பிரிவில் ஜென்லி தேகு வின்லி வெண்கலப் பதக்கம் பெற்றார்.[12]
 • குக் தீவுகள் தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. புற்தரைப் பந்துருட்டுதலில் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றது.[13]
 • வனுவாட்டு தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. வேல் எறிதல் பெண்கள் பிரிவில் வெண்கமப் பதக்கம் பெற்றது.[14]
 • டொமினிக்கா தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் பெற்றது.[15][16]
 • பிரித்தானிய கன்னித் தீவுகள் தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. ஆண்கள் 400மீ தடையோட்டப் போட்டியில் கைரன் மெக்மாஸ்டர் தங்கப் பதக்கம் பெற்றார்.[17][18]
 • செயிண்ட் லூசியா தனது முதலாவது பொதுநலவாய தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. லெவர்ன் ஸ்பென்சர் பெண்களுக்கான உயரப் பாய்ச்சலில் தங்கப் பதக்கம் பெற்றார்.

ஊக்கமருந்து தொகு

இந்தியாவின் சார்பில் பெண்கள் 53கிகி பாரம்தூக்கலில் தங்கம் வென்ற கும்க்சம் சஞ்சிதா சானு ஊக்கமருந்துக்கு எதிரான சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை தெரிய வந்தது. இவரது தங்கப் பதக்கம் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பப்புவா நியூ கினியைச் சேர்ந்த தீக்கா தோவா தங்கப் பதக்கத்தையும், வெண்கலம் பெற்ற கனடாவின் ரேச்சல் பாசினெட் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையைச் சேர்ந்த சமாரி வர்ணகுலசூரியா வெண்கலமும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[19]

மேற்கோள்கள் தொகு

 1. "Candidate City Manual". பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. December 2009 இம் மூலத்தில் இருந்து 5-07-2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100705075211/http://www.thecgf.com/games/2018-Candidate-City-Manual-Dec-2009.pdf. பார்த்த நாள்: 17-11-2011. 
 2. Ardern, Lucy (13-11-2011). "Coast wins 2018 Commonwealth Games". Gold Coast Bulletin இம் மூலத்தில் இருந்து 2011-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111114195049/http://www.goldcoast.com.au/article/2011/11/13/365241_commonwealth-games.html. பார்த்த நாள்: 17-11-2011. 
 3. "71 Nations and Territories. 6 Continents. 2 Billion citizens. 1 commonwealth family". Gold Coast 2018 Commonwealth Games Corporation இம் மூலத்தில் இருந்து 2016-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161010110422/https://www.gc2018.com/games/nations-and-territories. 
 4. Mackay, Duncan (14 October 2016). "Maldives set to miss Gold Coast 2018 after resigning from Commonwealth". Dunsar Media. http://www.insidethegames.biz/articles/1042634/maldives-set-to-miss-gold-coast-2018-after-resigning-from-commonwealth. 
 5. "Gambia to compete at Gold Coast 2018 after readmitted as CGF member". Dunsar Media. 31-03-2018. https://www.insidethegames.biz/articles/1063321/gambia-to-compete-at-gold-coast-2018-after-being-readmitted-as-cgf-member. 
 6. "Gold Coast 2018 to host largest Commonwealth para-sport programme". International Paralympic Committee. 3-03-2016. https://www.paralympic.org/news/gold-coast-2018-host-largest-commonwealth-para-sport-programme. 
 7. "Exclusive: Beach volleyball to be played at the 2018 Gold Coast Commonwealth Games". Gold Coast Bulletin. http://www.goldcoastbulletin.com.au/sport/exclusive-beach-volleyball-to-be-played-at-the-2018-gold-coast-commonwealth-games/news-story/0e75284699bda7026d0f84fd14bd5a95. பார்த்த நாள்: 5-04-2016. 
 8. "Women’s rugby added to Commonwealth Games". Rogers Media. 7 October 2014. http://www.sportsnet.ca/more/womens-rugby-sevens-added-to-commonwealth-games/. 
 9. "Level playing field for women at 2018 Commonwealth Games". The Scotsman (Edinburgh, Scotland). 7 October 2016. http://www.scotsman.com/sport/more-in-sport/level-playing-field-for-women-at-2018-commonwealth-games-1-4251310. 
 10. McKay, Duncan (7 October 2016). "Gold Coast 2018 to offer same amount of medals for men and women after seven events added". Dunsar Media. http://www.insidethegames.biz/index.php/articles/1042362/gold-coast-2018-to-offer-same-amount-of-medals-for-men-and-women-after-seven-events-added. 
 11. "அதிகாரபூர்வமான பதக்க அட்டவணை" இம் மூலத்தில் இருந்து 2018-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180424001650/https://results.gc2018.com/en/all-sports/medal-standings.htm. 
 12. "Sport: Solomon Islands win first Comm Games medal". Radio New Zealand. 7-04-2018. https://www.radionz.co.nz/international/pacific-news/354348/sport-solomon-islands-win-first-comm-games-medal. 
 13. Persico, Christina; Mitchell, Stephanie (9 April 2018). "Taranaki teen wins Cook Islands' first Commonwealth Games medal". Stuff.co.nz. https://www.stuff.co.nz/sport/commonwealth-games/102960911/taranaki-teen-wins-cook-islands-first-commonwealth-games-medal. 
 14. Butler, Nick (9 April 2018). "Simbine stuns Blake to win Commonwealth Games 100 metres". Dunsar Media. https://www.insidethegames.biz/articles/1063725/simbine-stuns-blake-to-win-commonwealth-games-100-metres-spoils. 
 15. "UPDATE: Thea Lafond wins bronze for Dominica at Commonwealth Games" (in en-US). Dominica News Online இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180411174427/http://dominicanewsonline.com/news/homepage/news/sports/breaking-news-thea-lafond-wins-bronze-for-dominica-at-commonwealth-games/. 
 16. "Athletics | Event Schedule Women's Triple Jump - Gold Coast 2018 Commonwealth Games" (in en-AU) இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180411174259/https://results.gc2018.com/en/athletics/event-schedule-women-s-triple-jump.htm. 
 17. Kelner, Martha (12 April 2018). "Kyron McMaster lets the tears flow after gold follows coach’s death". தி கார்டியன் (London, England). https://www.theguardian.com/sport/2018/apr/12/kyron-mcmaster-lets-tears-flow-gold-follows-coach-death. 
 18. Scott, Chris (12 April 2018). "A year after Hurricane Irma, Kyron McMaster wins BVI's first Commonwealth medal". CNN. https://www.cnn.com/2018/04/12/sport/kyron-mcmaster-wins-british-virgin-islands-first-commonwealth-medal/index.html. 
 19. [1]. Inside The Games (2018-05-31). Retrieved 2018-05-31.

வெளியிணைப்புகள் தொகு


முன்னர்
கிளாஸ்கோ
பொதுநலவாய விளையாட்டுகள்
கோல் கோஸ்ட்
XXI பொதுநலவாய விளையாட்டுகள் (2018)
பின்னர்
பர்மிங்காம்