எசுவாத்தினி

எசுவாத்தினி (Eswatini, சுவாசி: eSwatini), அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம் (Kingdom of Eswatini), முன்னர்: சுவாசிலாந்து (Swaziland) தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடகிழக்கே மொசாம்பிக், வடக்கு, மேற்கு மற்றும் தெற்கே தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கே 200 கிமீ நீலமும், கிழக்கில் மேற்கே 130 கிமீ நீலமும் கொண்ட இந்நாடு ஆப்பிரிக்காவில் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். ஆனாலும், இதன் காலநிலை மற்றும் இட அமைப்பியல் ஆகியவை குளிர்ந்த மற்றும் சூடான, உலர்ந்த குறைந்த புல்வெளி வரை வெவ்வேறானவையாகும்.

எசுவாத்தினி இராச்சியம்
Kingdom of Eswatini
Umbuso weSwatini
கொடி of எசுவாத்தினி
கொடி
சின்னம் of எசுவாத்தினி
சின்னம்
குறிக்கோள்: 
"Siyinqaba"
"நாம் ஒரு கோட்டை"
"நாம் பர்மம்/புதிர்"
"நாம் நம்மை மறைக்கிறோம்"
நாட்டுப்பண்: 
Nkulunkulu Mnikati wetibusiso temaSwati
ஓ கடவுளே, சுவாசிகளுக்கான வரங்களை அருள்பவர்

அமைவிடம்: எசுவாத்தினி  (கடுநீலம்) – in ஆப்பிரிகா  (இளநீலம்) – in ஆப்பிரிக்க ஒன்றியத்தில்  (இளநீலம்)
அமைவிடம்: எசுவாத்தினி  (கடுநீலம்)

– in ஆப்பிரிகா  (இளநீலம்)
– in ஆப்பிரிக்க ஒன்றியத்தில்  (இளநீலம்)

Location of எசுவாத்தினி
தலைநகரம்
பெரிய நகர்இம்பபான்
ஆட்சி மொழி(கள்)
மக்கள்சுவாசி
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்ற இரட்டையாட்சி
• உங்குவெனியாமா
மூன்றாம் முசுவாத்தி
• உந்துலோவுகாத்தி
உந்துவோம்பி துவாலா
• பிரதமர்
அம்புரோசு திலாமினி
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
சட்டப்பேரவை
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
• அறிவிப்பு
6 செப்டம்பர் 1968
• ஐநா உறுப்புரிமை
24 செப்டம்பர் 1968
• தற்போதைய அரசியலமைப்பு
1975
பரப்பு
• மொத்தம்
17,364 km2 (6,704 sq mi) (153-வது)
• நீர் (%)
0.9
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
0[1][2] (154-வது)
• 2017 கணக்கெடுப்பு
1,093,238[3]
• அடர்த்தி
68.2/km2 (176.6/sq mi) (135-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$12.023 பில்லியன்[4]
• தலைவிகிதம்
$10,346[4]
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$4.756 பில்லியன்[4]
• தலைவிகிதம்
$4,092[4]
ஜினி (2015)positive decrease 49.5[5]
உயர்
மமேசு (2017) 0.588[6]
மத்திமம் · 144-வது
நாணயம்
 • சுவாசி லிலாங்கனி (SZL)
 • தென்னாப்பிரிக்க ராண்டு (ZAR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (தெஆசீநே)
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி+268
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSZ
இணையக் குறி.sz

இங்குள்ள பெரும்பாலானவர்கள் உள்ளூர் சுவாசி இனத்தவர்கள் ஆவர். இவரக்ளின் மொழி சுவாசி மொழி (சிசுவாத்தி) ஆகும் சுவாசிகள் தமது இராச்சியத்தை 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றாம் உங்குவானேயின் தலைமையில் அமைத்தனர்.[7] 19-ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த இரண்டாம் முசுவாத்தி மன்னரின் காலத்தில் இந்நாட்டின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இதன் இன்றைய எல்லைகள் 1881 இல் ஆபிரிக்காவுக்கான போட்டிக் காலத்தில் வரையறுக்கப்பட்டன.[8] இரண்டாம் பூவர் போரை அடுத்து, இவ்விராச்சியம் சுவாசிலாந்து என்ற பெயரில் 1903 முதல் பிரித்தானியாவின் காப்புநாடாக ஆக்கப்பட்டது. 1968 செப்டம்பர் 6 இல் இது பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.[9] 2018 ஏப்ரல் 18 இல் சுவாசிலாந்து இராச்சியம் என்ற இதன் பெயர் அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம் என மாற்றப்பட்டது. இப்பெயரே சுவாசிகளினால் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[10][11]

புவியியல்

தொகு
 

சுவாசிலாந்தில் மொசாம்பிக் எல்லையில் பல மலைகளும் மழைக்காடுகளும் உள்ளன. பெரிய உசுத்து ஆறு உட்படப் பல ஆறுகள் இந்நாட்டில் பாய்கின்றன. இதன் தலைநகரான உம்பானேயில் (Mbabane) 67,200 பேர் (2004) வசிக்கிறார்கள்.

பொருளாதாரம்

தொகு

சுவாசிலாந்து ஆப்பிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றானாலும், இது உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகும். இதன் 38.8% வீதமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொட்சுவானாக்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிகமானோர் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்.

மதம்

தொகு

82.70% வீதமானோர் இங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம்: 0.95%, பஹாய்: 0.5%, மற்றும் இந்து: 0.15%.[1] பரணிடப்பட்டது 2008-06-26 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு
 1. "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
 2. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
 3. "Swaziland Releases Population Count from 2017 Census". United Nations Population Fund.
 4. 4.0 4.1 4.2 4.3 "Report for Selected Countries and Subjects". International Monetary Fund.
 5. "Swaziland – Country partnership strategy FY2015-2018". World Bank. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
 6. "2018 Human Development Report". United Nations Development Programme. 2018. Archived from the original on 14 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 7. Bonner, Philip (1982). Kings, Commoners and Concessionaires. Great Britain: Cambridge University Press. pp. 9–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521242703.
 8. Kuper, Hilda (1986). The Swazi: A South African Kingdom. Holt, Rinehart and Winston. pp. 9–10.
 9. Gillis, Hugh (1999). The Kingdom of Swaziland: Studies in Political History. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313306702.
 10. "UN Member States". ஐக்கிய நாடுகள் அவை. 30 May 2018. பார்க்கப்பட்ட நாள் 30 June 2018.
 11. "Kingdom of Swaziland Change Now Official". Times Of Swaziland. 18 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுவாத்தினி&oldid=3849646" இலிருந்து மீள்விக்கப்பட்டது