ஆபிரிக்காவுக்கான போட்டி

"ஆபிரிக்காவுக்கான போட்டி" (Scramble for Africa) புதிய பேரரசுவாதக் காலத்தில் 1881க்கும் 1914க்கும் இடையே ஐரோப்பிய அரசுகள் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, குடியேற்றம், கைப்பற்றுகை மூலமாக ஆபிரிக்க பகுதிகளை பிடிக்க நடந்த போட்டியைக் குறிப்பிடுவதாகும். இதனை ஆபிரிக்காவின் பங்கீடு என்றும் ஆபிரிக்காவின் வெற்றிப்பேறு எனவும் குறிப்பிடப்படுகின்றன. 1870இல் 10 விழுக்காடு ஆபிரிக்கா மட்டுமே ஐரோப்பியர் கட்டுப்பாட்டில் இருந்தது; 1914இல் இது 90 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. எதியோப்பியாவும் (அபிசீனியா) லைபீரியாவும் மட்டுமே சுதந்திரமாக இருந்தன. அமெரிக்க ஐக்கிய நாடு உரிமை கொண்டாடிய ஒரே குடியேற்றமாக லைபீரியா இருந்தது; அமெரிக்க குடியேற்றச் சமூகம் இதனை சனவரி 7, 1822இல் நிறுவப்பட்டது.

1913இல் ஐரோப்பிய குடியேற்ற அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆபிரிக்கா; தற்போதைய தேசிய எல்லைகளும் காட்டப்பட்டுள்ளன.
  தன்னாட்சி
ஆபிரிக்கா 1880ஆம் ஆண்டில் இருந்ததற்கும் 1913ஆம் ஆண்டில் இருந்ததற்கும் ஒப்பீடு.

1884ஆம் ஆண்டு நடந்த பெர்லின் மாநாடு ஆபிரிக்காவின் குடியேற்றத்தையும் வணிகத்தையும் ஒழுங்குபடுத்தியது; இதுவே ஆபிரிக்க பங்கீட்டிற்கான துவக்க நிகழ்வாக கருதப்படுகின்றது.[1]19வது நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் ஐரோப்பிய பேரரசுகளிடையே நிலவிய அரசியல், பொருளியல் போட்டாப்போட்டி பின்னணியில் ஆபிரிக்காவின் பங்கீடு மூலம் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதை தவிர்த்தன.[2] 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் "முறைசாரா பேரரசுவாதத்திலிருந்து" (ஆதிக்க அரசியல்), படைகளின் தாக்கத்தாலும் பொருளியல் ஆதிக்கத்தாலும் நேரடி ஆட்சிக்கு, குடியேற்றவாதப் பேரரசுவாதத்திற்கு மாறியது.[3]

மேற்சான்றுகள் தொகு

  1. Brantlinger, Patrick (1985). "Victorians and Africans: The Genealogy of the Myth of the Dark Continent". Critical Inquiry 12 (1): 166–203. doi:10.1086/448326. https://archive.org/details/sim_critical-inquiry_autumn-1985_12_1/page/166. 
  2. R. Robinson, J. Gallagher and A. Denny, Africa and the Victorians, London, 1965, p. 175.
  3. Kevin Shillington, History of Africa. Revised second edition (New York: Macmillian Publishers Limited, 2005), 301.