பூரக்களி
பூரக்களி என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வட மலபார் பகுதிகளில் ஒன்பது நாள் பூரத்திருவிழாவின் போது பகவதியம்மன் ஆலயங்களில் ஆடப்படும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும். [1]
பூரத்திருவிழா மலையாள நாட்காட்டியின் மீனம் மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் துவங்கி பூர நட்சத்திரத்தில் முடிவடையும்.
சிங்க வேடமிட்ட வாலிபர்கள் பெரிய குத்துவிளக்கைச் சுற்றி ஆடிப் பாடுவதோடு தற்காப்புக் கலை அசைவுகளையும் செய்வர். இந்நிகழ்வில் பங்கேற்கும் வாலிபர்கள் ஒரு மாத காலம் கடும் விரதமும் பயிற்சியும் மேற்கொள்வர்.இதில் பாடப்படும் பாடலகள் பெரும்பாலும் இராமாயணம் மற்றும் ஸ்ரீமத்பாகவதத்தில் உள்ள பாடல்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகுGallery
தொகு-
பூரக்களி
-
பூரக்களி
-
பூரக்களி
-
பூரக்களி
-
பூரக்களி