பூரணி (எழுத்தாளர்)

பூரணி (17 அக்டோபர் 1913 - 17 நவம்பர் 2013[1]) தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வந்தார். பூரணி - கவிதைகள், பூரணி நினைவலைகள், பூரணி சிறுகதைகள், செவிவழிக் கதைகள் போன்ற பல நூல்கள் வெளியாகியுள்ளன.

பூரணி
பிறப்புசம்பூரணம்
(1913-10-17)அக்டோபர் 17, 1913
இறப்புநவம்பர் 17, 2013(2013-11-17) (அகவை 100)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்இராமசாமி ஐயர்,
சீதாலட்சுமி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பூரணியின் இயற்பெயர் சம்பூரணம். தந்தை இராமசாமி ஐயர், தாயார் சீதாலட்சுமி. இவர்களின் 10 குழந்தைகளில் சம்பூரணம் ஒன்பதாவதாகப் பிறந்தார். தந்தை ஒரு தமிழ்ப் பண்டிதர். இராமசாமி அய்யர் 1864 இல் பிறந்தவர். தொல்காப்பியத்திற்கு எளிய உரை எழுதியவர். பழநியில் 20 ஆண்டுகளாக ஆண்கள் பள்ளியைத் தன் சொந்தப் பணத்தில் ஆரம்பித்து நடத்தி வந்தார். பின் சொத்துகள் அழிந்து விட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னி பெசண்ட் அம்மையாரிடம் கையளித்தார். \[2] பூரணிக்கு ஒன்பது பிள்ளைகள்.

பூரணி 1927 இல் கவிதை எழுத .ஆரம்பித்தார். 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். 1937 இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தன் இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பாரத ஜோதி இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.[2] கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி ஆகிய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். திண்ண இணைய இதழிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.[2]

நூல்கள் தொகு

  • பூரணி கவிதைகள் காலச்சுவடு வெளியீடு, 2003
  • பூரணி நினைவலைகள் (தன்வரலாறு), சதுரம் பதிப்பம் (2005)
  • பூரணி சிறுகதைகள், மணிவாசகர் பதிப்பகம், 2009
  • செவிவழிக் கதைகள், வசந்தா பதிப்பகம்

விருதுகள் தொகு

  • 2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருது
  • 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரணி_(எழுத்தாளர்)&oldid=2634766" இலிருந்து மீள்விக்கப்பட்டது