பூர்ணிமா தயாள்

இந்திய ஓவியர்

பூர்ணிமா தயாள் (Poornima Dayal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியராவார். புது தில்லியில் இவர் பிறந்தார். பண்பியல் ஓவியக் கலைக்காக மிகவும் பிரபலமானவராக இருந்தார். இவரது படைப்புகள் மும்பையில் உள்ள சகாங்கிர் கலைக்கூடத்திலும், வியன்னாவில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பன்னாட்டு கலைக் கண்காட்சியிலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கலைக் கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான இவர், ஆர்ட் குரூவ்சு என்ற கலை மன்றத்தின் நிறுவனர் ஆவார். இவ்வமைப்பின் நோக்கம் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரிப்பது, ஊக்குவிப்பது மற்றும் முன்னணிக்கு கொண்டு வருவது ஆகும்.[1][2][3][4][5][6]

பூர்ணிமா தயாள்
பிறப்புபுது தில்லி
தேசியம்இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பல்கலைக்கழகம்
பணிஓவியர்
வலைத்தளம்
www.poornimadayal.com

மேற்கோள்கள் தொகு

  1. Waikar, Kanak (15 June 2023). "Explorations : artistic journey of Poornima Dayal". Chinha Art News. https://chinha.in/news-views-english/explorations-artistic-journey-of-poornima-dayal/. 
  2. "Enjoy paintings, meet artists online" (in en-IN). The Hindu. 26 February 2021. https://www.thehindu.com/entertainment/art/three-day-interactive-online-exhibition-art-grooves-opens/article33940277.ece. 
  3. Shukla, Himshikha (3 December 2021). "Art Fair by Art Grooves!". Woman's Era. https://womansera.com/art-fair-by-art-grooves/. 
  4. Tascon, Adam (16 April 2022). "The first physical exhibition of the online art platform, Art Grooves is here!". Magzoid Magazine. https://magzoid.com/the-first-physical-exhibition-of-the-online-art-platform-art-grooves-is-here/. 
  5. "Poornima Dayal - City Of Dreams". HMVC Gallery New York. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
  6. "Explorations by Poornima Dayal". Jehangir Art Gallery. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_தயாள்&oldid=3923568" இலிருந்து மீள்விக்கப்பட்டது