பூர்வகுடிகள் பாதுகாப்பு மற்றும் அபின் விற்பனை கட்டுப்பாடு சட்டம் 1897

பழங்குடியினர் பாதுகாப்பு மற்றும் அபின் விற்பனை கட்டுப்பாடு சட்டம் 1897 (Aboriginals Protection and Restriction of the Sale of Opium Act 1897), ஆத்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இது ஆத்திரேலியத் தொல்குடிகள் வசிக்கும் இடங்கள் மற்றும் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பழங்குடியினர் குடியிருப்புக்களையும் உருவாக்குவதற்காக இயற்றப்பட்டச் சட்டமாகும்.

இச்சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் பல்வேறு மாற்றுச் சட்டங்கள் 20ஆம் நூற்றாண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பூர்வகுடி நிலச் சட்டம் 1991 மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகள் சட்டம் 1991 ஆகியவை நிறைவேற்றப்படும் வரை[1], நிலம் மற்றும் பூர்வகுடி மக்கள் மீதான கட்டுப்பாடு தொடர்பான 1897 சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மாற்றப்படவில்லை.

பின்னணி

தொகு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குயின்ஸ்லாந்தில் உள்ள பல ஆத்திரேலியத் தொல்குடிகள் தொற்றுநோய் பரவல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அபின் பயன்பாடுகளால் பூர்வகுடி மக்கள் தொகை குறையும் நிலை ஏற்பட்டது. எனவே குயின்ஸ்லாந்து மாகாண அரசு 1897ஆம் ஆண்டில் பழங்குடியினர் பாதுகாப்பு மற்றும் அபின் விற்பனை கட்டுப்பாடு சட்டம் இயற்றியது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Queensland Parliamentary Papers: Report of the Chief Protector of Aboriginals" (PDF). AIATSIS. 1920. pp. 1–5.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு