பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

பூவிலகின் நண்பர்கள் இயக்கம் என்பது "உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது" என்பதை அடிப்படை நோக்கமாய்க் கொண்டு தமிழகத்தில் செயல்படும்[1] ஓர் அரசு சாரா இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சின்னம்

வரலாறு தொகு

1990 களில் சுற்றுச்சூழல் ஆர்வம் மிக்க இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி இந்த இயக்கம் துவங்கப்பட்டது. தனியாகவும் புவியின் நண்பர்கள், உலகளாவிய நிதியம், பசுமை அமைதி (Greenpeace), பினாங்கு பயனீட்டாளர் சங்கம் போன்ற அமைப்புகளோடும் இணைந்தும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் “பூவுலகின் நண்பர்கள்” ஈடுபட்டனர். பூவுலகு எனும் பெயரில் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியாகும் சூழல் இதழையும் வெளியிட்டனர். இவ்வமைப்பில் முக்கியப் பங்காற்றிய நெடுஞ்செழியன் [2] மற்றும் அசுரன் ஆகியோர் உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து சிலகாலம் தேங்கியிருந்த பணிகள் இவ்விருவரின் நண்பர்கள் மற்றும் பலரால் மீண்டும் துவங்கப்பட்டன. பூவுலகு இதழ் தற்போது இரு மாத இதழாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் குழுவினர் தன்னார்வமாகப் பணிபுரியும் ஆர்வலர்களாய் உள்ளனர்.[3]

பணிகள் தொகு

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி நூல் பதிப்பித்தல், பரப்புதல், தீர்வுகளை பரிந்துரைத்தல், ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் ‌ஆகியவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் பணியை இவ்வியக்கம் செய்து வருகிறது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தங்கள் வலைத்தளத்தில் இயக்கத்தினர் தங்களைப் பற்றி அளித்துள்ள தகவல்". Archived from the original on 2011-06-09. பார்க்கப்பட்ட நாள் 2011-04-18.
  2. கீற்று தளத்தில் தலித் முரசு இதழில் வெளிவந்த நெடுஞ்செழியனுக்கான இரங்கல் செய்தி
  3. எழுத்தாளர் ஜெயமோகன் வலைத்தளத்தில் உள்ள செய்தி