மீத்தேன் வாயு திட்டம், இந்தியா

மீத்தேன் வாயு திட்டம் ஒன்றிய அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டமாகும். இதன் நோக்கம் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ள மீத்தேன் வாயுவைக் கிணறுகள் அமைத்து எடுப்பதாகும். இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[1][2]

அரசு தனியார் ஒப்பந்தம்

தொகு

தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப் பகுதியில் பூமிக்கு அடியில் அரியவகை நிலக்கரி இருப்பதாக மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது. அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. ஒன்றிய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.[3][4]

விவசாயிகள் எதிர்ப்பு

தொகு

ஆரம்பம் முதலே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்[5] இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போரட்டங்களை நம்மாழ்வார் என்ற இயற்கை வேளான் விஞ்ஞானி முன்னின்று நடத்தினர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்று சூழல் பாதிக்கும் என்றும், கிணறுகள் அமைக்கும் பொழுது வெளியேற்றப்படும் நீரினால் நிலத்தடி நீர் குறைந்து கடல்நீர் உட்புகும் என்றும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போன்றவை போராட்டகாரர்கள் முன்வைக்கும் கருத்துக்களாகும்.[6] சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்கனவே இத்திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கி உள்ளது.[7][8][9]

தற்காலிகத் தடை

தொகு

திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தினால் முதலமைச்சர் ஜெயலலிதா தற்காலிகமாக மீத்தேன் வாயுக் கிணறுகள் தொடர்பான செயல்பாடுகளுக்குத் தடை விதித்தார்.[10][11]

உசாத்துனைகள்

தொகு
  1. "Mines of concern". Frontline. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.
  2. "மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் கைவிடக்கோரி தஞ்சையில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.
  3. http://content.time.com/time/world/article/0,8599,1890646,00.html
  4. "Mannargudi Block". GEECL. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.
  5. காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வைகோ வேண்டுகோள்
  6. "மீத்தேன் வாயு திட்டம் நிறைவேற்றினால் தமிழகம் பாலைவனமாகி விடும்: நம்மாழ்வார் பேட்டி". Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
  7. Great Eastern Energy Corpn gets nod for CBM block in Tamil Nadu
  8. "வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மீத்தேன் வாயு திட்டம்-". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.
  9. "மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: மன்னார்குடியில் ஜன. 25-ல் பேரணி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.
  10. டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்க தடை: ஆய்வு குழு அமைப்பு... ஜெயலலிதா
  11. "நிலத்தடி மீத்தேன் எடுக்கும் பணிகளை இடைநிறுத்த ஜெ. உத்தரவு". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2013.