பெகிடோல்
பெகிடோல் டெண்டேடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஹைமினாப்பிடிரா
குடும்பம்:
பார்மிசிடே
பேரினம்:
பெகிடோல்

வெஸ்ட்வுட், 1839
உயிரியற் பல்வகைமை
1000 மேற்பட்ட சிற்றினங்கள்

பெகிடோல் (Pheidole) என்பது மைமிசினே எனப்படும் எறும்புத் துணைக்குடும்பத்தில் உள்ள பேரினம் ஆகும். இந்த பேரினம் பரவலாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தும் பல சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1] முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றிய இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் பல இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

பெகிடோல் மெண்டிகுலா

காலனி அமைப்பு

தொகு

பெரும்பாலான இனங்கள் பெகிடோல் சிற்றினங்களில் பல்லுருத்தோற்றம் கொண்ட கூட்டமைப்பினைக் கொண்டவை. இதனுடைய கூட்டமைப்பில் இருவகையான வேலைக்கார எறும்புகள் உள்ளன. இவை "சிறிய" எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் "பெரிய" எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் அல்லது "வீரர்கள்" ஆவர். வீரர்கள் பொதுவாக உடல் அளவோடு ஒப்பிடுகையில் மிகப் பெரிய தலையுடன் கீழ்த்தாடையினையும் கொண்டுள்ளன.[சான்று தேவை]

கூடுதலாக, மற்ற எறும்பு இனங்களைப் போலவே, ஒரு கூட்டமைப்பில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இராணிகள் இருக்கலாம். மேலும் முதிர்ந்த கூட்டமைப்பில், இறகுகளுடைய கன்னி எறும்புகள், ஆண் எறும்புகளுடன் காணப்படும். 

வீரர்கள்

தொகு

தனித்துவமான பெரிய அளவிலான வேலைக்கார எறும்புகள் - வீரர்கள், கொண்டுள்ள பெரிய தலை காரணமாக, இந்த இனத்திற்கான பெயரான பெகிடோல் "பெரிய தலை எறும்புகள்" என்ற புனைபெயரைப் பெற்றுத்தந்துள்ளனர். பெகிடோல் கூட்டமைப்பின் முக்கிய வேலைக்கார எறும்புகளாகவும். இவர்கள் கடுமையானவையாகத் தோன்றினாலும், பெரும்பாலும் மிகவும் கூச்ச சுபாவமுடையவை. மேலும் ஆபத்துக்காலங்களில் முதலில் தப்பி ஓடுபவர்களாக உள்ளனர். பல பெகிடோல் இனங்கள் பெரிய தொழிலாளர்கள் மீது முட்டையிடும் ஒட்டுண்ணி ஃபோரிட் ஈக்களின் இரையாகும். இந்த ஈக்களின் குடம்பிகள் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்களின் தலை சூழுறைகளில் வளர்கின்றன. இறுதியில் இவை தலையினைத் துண்டித்துவிடுகின்றன.[சான்று தேவை]

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெரிய வேலைக்கார எறும்புகள், கூட்டுக்குள் பெரிய உணவுப் பொருட்களை உடைக்க அல்லது வெளியில் விதைகள் போன்ற பெரிய பொருட்களை எடுத்துச் செல்லும் வேலையினைச் செய்கின்றன. பல பெகிடோல் இனங்கள் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான விதை நுகர்வோர்களாக உள்ளன ("அறுவடை செய்பவர்கள்").[சான்று தேவை]

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றில் சில:

மேற்கோள்கள்

தொகு
  1. E. O. Wilson (2003). Pheidole in the New World: A Dominant, Hyperdiverse Ant Genus. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-00293-8.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெகிடோல்&oldid=3581478" இலிருந்து மீள்விக்கப்பட்டது