பெகோனா விலா
மரியா பெகோனா விலா கோசுட்டாசு María Begoña Vila Costas) (பிறப்பு: 1963) ஓர் எசுப்பானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் சுருட்டைப் பால்வெளி ஆய்வில் பெயர்பெற்றவர்.இவர் இப்போது வாழ்சிங்டன் டி. சி நகரில் வாழ்கிறார். அமைப்புப் பொறியாளராக கோடார்டு விண்வெளிப் பறப்பு மையக் கோள் புவியியல், புவி இய்ற்பியல், புவி வேதியியல் ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.[1] இவர் ஜேம்சு விண்வெளித் தொலைநோக்கிக்கான நுண் வழிகாட்டு உணரி, அண்மை அகச் சிவப்புக் கதிர் படிம வாக்கி, வரிப்பிளவா கதிர்நிரல் வரைவி ஆகியவற்றை வழிநடாத்தும் பொறியாளரக உள்ளார். இது அபுள் தொலைநோக்கியின் வழித்தோன்றலாகும். இவர் அத்தொலைநோக்கியுடன் இணைந்த கருவிகளின் குளிர்நிலை ஓர்வுக்கும் பொறுப்பு ஏற்றவர் ஆவார்.
வாழ்க்கைப்பணி
தொகுஇவர் கம்போசிட்டெலாவில் உள்ள சாந்தாகோ பல்கலைக்கழகத்தின் கானரித் தீவு வானியற்பியல் நிறுவனத்தில் 1981 முதல் 1986 வரை வானியற்பியல் கற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை வானியற்பியலில் மான்செசுட்டர் பல்கலைக்கழக ஜோதிரல் பாங்கு வானியற்பியல் மையத்தில் 1989 இல் பெற்றார்.[2]
இவர் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நுண் வழிகாட்டு உணரி, அண்மை அகச் சிவப்புக் கதிர் படிம வாக்கி, வரிப்பிளவா கதிர்நிரல் வரைவி கருவித் தொகுதியின் வடிவமைப்பிலும் க்கட்டுமான வேலையிலும் ஈடுபட்டார். இது 2912 இல் முடித்துத் தரப்பட்டதும் ஒரு கனடியக் குழுமத்தால் ஜேம்சு வெபு விண்வெளித் தொலைநோக்கியில் கனடிய விண்வெளி முகமை வழிகாட்டுதலின்படி நிறுவப்படவிருந்தது. இதற்கு நாசா முதலில் குளிர்நிலை ஓர்வைச் செய்தது. எனவே நாசா விலாவை இந்தக் கருவித் தொகுதியின் ஓர்வைச் செய்ய வேறொரு குழுமம் வழி அமைப்புப் பொறியாளராக அமர்த்த முடிவு செய்திருந்தது.[3]
இவர் 2013 இல் இருந்தே இத்தொகுதியின் அமைப்புப் பொறியாளராக செயல்பட்டார். இதில் இவர் உணரி, வட்டணையில் உணரி இயக்கம் அதன் வரம்புகள், மென்பொருள் அமைப்புகள் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித்து வந்தார். மேலும் இவர் குளிர்நிலை ஓர்வுக்காக அணிப்படுத்தியிருந்த ஒருங்கிணைந்த அறிவியல் கருவிகள் பெட்டகம் முழுவதையும் ஒருங்கிணைத்து வந்தார்.[2][3]
இவர் எசுப்பானிய அறிவியலாளர் சமுதாய அமைப்பின் உறுப்பினர் ஆவார். இது மேரிலாந்திலும் வாழ்சிங்டனிலும் வாழும் எசுப்பானிய அறிவியல் அறிஞர் கூட்டமைப்பாகும்.[4]
இவர் 2016 இல் நாசாவின் தன்னிகரற்ற பொதுத் துறைச் சாதனை பதக்கத்தைப் பெற்றார். இது இவரது ப்ல்லாண்டு தலைமையேற்புக்காகவும் ஆற்றிய அறிவியல் சாதனைகளுக்காகவும் நுண் வழிகாட்டு உணரி, அண்மை அகச் சிவப்புக் கதிர் படிம வாக்கி, வரிப்பிளவா கதிர்நிரல் வரைவி ஆகிய கருவித் தொகுதியை வடிவமைத்து உருவாக்கியமைக்காக வழங்கப்பட்டது.[3][5]
இவர் 2017 இல் இவரது ஒட்டுமொத்த அறிவியல் சாதனைகளுக்காக மரியா யோசபா வோனென்பர்கர் பிளானெல்சு விருதை வென்றார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Palca, Joe (28 November 2016). "Some Assembly Required: New Space Telescope Will Take Shape After Launch". KPBS Public Media. Archived from the original on 31 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
- ↑ 2.0 2.1 Sacristán, Enrique (22 August 2016). "La NASA premia a una astrofísica gallega por su trabajo en el mayor telescopio espacial" (in Spanish). El Confidencial. https://www.elconfidencial.com/tecnologia/ciencia/2016-08-22/la-nasa-premia-a-una-astrofisica-gallega_1249656/.
- ↑ 3.0 3.1 3.2 "NASA gives recognition to the work of Spanish astrophysicist Begoña Vila". España Global. September 13, 2016. பார்க்கப்பட்ட நாள் May 25, 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Washington DC" (in Spanish). Españoles Científicos en USA. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "La astrofísica viguesa premiada por la NASA, Begoña Vila, visita 'A Revista'" (in Spanish). Faro de Vigo (Vigo). 26 August 2016. https://www.farodevigo.es/sociedad/2016/08/26/astrofisica-viguesa-premiada-nasa-begona/1521926.html.
- ↑ "La astrofísica viguesa Begoña Vila gana el premio Wonenburger" (in Spanish). La Voz de Galicia (Santiago de Compostela). 28 October 2017. https://www.lavozdegalicia.es/noticia/sociedad/2017/10/28/astrofisica-viguesa-begona-vila-gana-premio-wonenburger/0003_201710G28P31993.htm.
வெளி இணைப்புகள்
தொகு- Begoña Vila at NASA