பெக்கோரைட்டு

செர்பெடைன் குழுக் கனிமங்களில் ஒரு உறுப்பினர்

பெக்கோரைட்டு (Pecoraite) என்பது Ni3(Si2O5)(OH)4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிக்கல் சிலிக்கேட்டு வகைக் கனிமமான இது செர்பெடைன் குழுக் கனிமங்களில் ஒரு உறுப்பினராகக் கருதப்படுகிறது. புவியியலாளர் வில்லியம் தாமசு பெக்கோரா கண்டுபிடித்த காரணத்தால் இக்கனிமத்திற்கு பெக்கோரைட்டு என்ற பெயர் இடப்பட்டிருக்கிறது. மில்லெரைட்டு போன்ற நிக்கல் சல்பைடு கனிமங்கள் அல்லது விண்கற்களின் சூழல்சிதைவு அல்லது ஆக்சிசனேற்றத்துடன் இக்கனிமம் தொடர்பு கொண்டுள்ளது. உருமாறிய மிகுகாரப்பாறை வகைகளிலும் பெக்கோரைட்டு காணப்படுகிறது [1] .பச்சை, எலுமிச்சை பச்சை அல்லது நீலப் பச்சை நிறத்துடன் மெழுகுத் தன்மையுடன் மண்ணைப் போன்ற மிளிர்வுப் பாறையாகத் தோற்றமளிக்கிறது, மோவின் அளவுகோலில் பெக்கோரைட்டின் கடினத்தன்மை மதிப்பு 2.5 ஆகும் [2]. அமைப்புரீதியாக பெக்கோரைட்டு பொதுவாக வளைந்த தட்டுகள், சுருள்கள் மற்றும் குழாய்களுடன் தொடர்புகொண்டதாக கருதப்படுகிறது. தானியம் போன்ற சிறு மணிகளாகவும் பெருத்த பொதிவுகளாகவும் கூட பெக்கோரைட்டு கனிமம் காணப்படலாம்.

பெக்கோரைட்டுPecoraite
வெர்மோண்டு, ஈடனின் பெக்கோரைட்டு
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNi3(Si2O5)(OH)4
இனங்காணல்
நிறம்பச்சை, நீலப்பச்சை,பசுமஞ்சள்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
அறியப்படாத இடக்குழு
மோவின் அளவுகோல் வலிமை2.5-3
மிளிர்வுமெழுகு, மண் மிளிர்வு
கீற்றுவண்ணம்வெளிர் பச்சை
ஒப்படர்த்தி3.084

பன்னாட்டு கனிமவியம் சங்கம் பெக்கோரைட்டு கனிமத்தை Pco[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Mineralogy Database". Mindat. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  2. "Webmineral". பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கோரைட்டு&oldid=3938647" இலிருந்து மீள்விக்கப்பட்டது