நிக்கல் சல்பைடு

நிக்கல் சல்பைடு (Nickel sulfide) என்பது NiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நீறத் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தை நிக்கல்(II) உப்புகளுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து சூடுபடுத்துவதால் உருவாக்கலாம். மில்லெரைட்டு கனிமம் உட்பட நிக்கல் சல்பைடுகளின் பல வகைகள் அறியப்படுகின்றன. இக்கனிமத்தின் மூலக்கூற்று வாய்பாடும் NiS என்றே குறிக்கப்படுகிறது. பயனுள்ள ஒரு தாதுவதாக செயல்படுவதை அடுத்து இவை கந்தக நீக்கல் வினைகளில் விளைபொருளாகவும் உருவாகின்றன. சில சமயங்களில் இவை வினையூக்கிகளாகவும் பயன்படுகின்றன. விகிதச் சமமில்லா அளவுகளிலான நிக்கல் சல்பைடு வடிவங்களும் காணப்படுகின்றன. உதாரணம்: Ni9S8 மற்றும் Ni3S2.

நிக்கல் சல்பைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Nickel sulfide [1]
வேறு பெயர்கள்
நிக்கல் மோனோசல்பைடு,நிக்கல் ஒருசல்பைடு, நிக்கலசு சல்பைடு
இனங்காட்டிகள்
16812-54-7
ChemSpider 26134
EC number 234-349-7
பப்கெம் 28094
வே.ந.வி.ப எண் QR9705000
பண்புகள்
NiS
வாய்ப்பாட்டு எடை 90.7584 கி மோல்−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 5.87 கி/செ.மீ3
உருகுநிலை 797 °C (1,467 °F; 1,070 K)
கொதிநிலை 1,388 °C (2,530 °F; 1,661 K)
கரையாது
கரைதிறன் நைட்ரிக் அமிலத்தில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் சுவாசிப்பதால் புற்றுநோய வரலாம்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
R-சொற்றொடர்கள் R43, R49, R50, R53
S-சொற்றொடர்கள் S45, S53, S61, S60
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

இச்சேர்மத்துடன் தொடர்புடைய பல சேர்மங்களைப் போல நிக்கல் சல்பைடும் நிக்கல் ஆர்சனைடு நோக்குருவை ஏற்றுள்ளது. இக்கட்டமைப்பில் நிக்கல் எண்முக வடிவமைப்பிலும் சல்பைடு மையங்கள் முக்கோணப்பட்டகத் தளவடிவமைப்பிலும் காணப்படுகின்றன[2]

இரண்டு வகையான பல்லுருவத் தோற்றங்களை நிக்கல் சல்பைடு கொண்டிருக்கிறது. ஆல்பா வடிவம் அறுகோண அலகுக் கூட்டையும் பீட்டா வடிவம் சாய்சதுர அலகுக் கூட்டையும் பெற்றுள்ளன. பெருமளவில் கண்ணாடி தயாரிக்கும் போது சிறிய அளவிலான நிக்கல் சல்பைடு அரைகுறையாகத் தோன்றுகிறது. பலப்படுத்தப்பட்ட சன்னல் கண்ணாடிச் சட்டங்களில் ஏற்படும் விரிசல்கள் , நிக்கல் சல்பைடின் ஆல்பா மற்றும் பீட்டா வடிவ மாற்றங்களின் போது நிகழும் குறைபாட்டாலேயே ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது[3][4]

தயாரிப்பு

தொகு

கரைதிறன் அடிப்படையில் உலோகங்களை பிரித்தெடுப்பது என்ற தொடக்கக்கால பாரம்பரியமான பண்பறி பகுப்பாய்வு திட்டமுறையில் கருப்பு நிறத்துடனான இத்திண்ம நிக்கல் சல்பைடு வீழ்படிவாக்குதலும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இவ்வினைக்கான சமன்பாடு இவ்வாறு எழுதப்படுகிறது:[5]

Ni2+ (aq) + H2S (aq) → NiS (s) + 2 H+ (aq)

NiCl2 மற்றும் Na2S சேர்மங்களில் இருந்து பெறப்படும் திண்மநிலை இடப்பெயர்ச்சி வினைகள் மற்றும் தனிமங்களின் உயர் வெப்பநிலை வினைகள் உட்பட பல கட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்பு முறைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன.[6]

தோற்றம்

தொகு

நிக்கல் சல்பைடுவின் மூலக்கூற்று வாய்ப்பாடையே கொண்டிருக்கும் மில்லெரைட்டு கனிமத்தின் கட்டமைப்பு, செயற்கை முறையில் விகிதச்சம அளவுகளில் தயாரிக்கப்படும் நிக்கல் சல்பைடுவின் கட்டமைப்பில் இருந்து மாறுபடுகிறது. தாழ்வெப்பநிலை நீர்வெப்ப முறைத் திட்டங்களால் இயற்கையாக கார்பனேட்டு பாறை குழிவுகளிலும் பிற நிக்கல் கனிமங்களுடன் உடன் விளைபொருளாகவும் மில்லெரைட்டு கனிமம் உருவாகிறது. [7]

 
மில்லெரைட்டு படிகங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Nickel sulfide - Compound Summary". பார்க்கப்பட்ட நாள் October 17, 2012.
  2. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
  3. Bishop, D.W.; Thomas, P.S.; Ray, A.S. (1998). "Raman spectra of nickel(II) sulfide". Materials Research Bulletin 33 (9): 1303. doi:10.1016/S0025-5408(98)00121-4. https://archive.org/details/sim_materials-research-bulletin_1998-09_33_9/page/1303. 
  4. "NiS and Spontaneous Breakage". Glass on Web. Nov 2012. Archived from the original on 2013-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
  5. O.Glemser "Nickel Sulfide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1551.
  6. leading reference can be found in: Shabnam Virji, Richard B. Kaner, Bruce H. Weiller "Direct Electrical Measurement of the Conversion of Metal Acetates to Metal Sulfides by Hydrogen Sulfide" Inorg. Chem., 2006, 45 (26), pp 10467–10471.எஆசு:10.1021/ic0607585
  7. Gamsjager H. C., Bugajski J., Gajda T., Lemire R. J., Preis W. (2005) Chemical Thermodynamics of Nickel, Amsterdam, Elsevier B.V.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்_சல்பைடு&oldid=4157380" இலிருந்து மீள்விக்கப்பட்டது