பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை பெங்களூர், இந்தியா

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, இந்தியாவிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளில் இரண்டாவது பெரிய காட்சிச்சாலை ஆகும்.  இது கப்பன் பூங்காவின் நுழைவுவாயிலில் உள்ளது. இது 1983ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விசுவரய்யா அருங்காட்சியகத்தின் அருகில் உள்ளது. இங்கு நுழைவுக்கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை அரசு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை பெங்களூரு என்றும் அழைக்கின்றனர். 

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
பெங்களூரு நீர்வாழ் உயிரி காட்சியகம், ஜீன் 2016
Map
12°58′35″N 77°35′55″E / 12.9765°N 77.5986°E / 12.9765; 77.5986
திறக்கப்பட்ட தேதி1983[1]
அமைவிடம்பெங்களூரு, கர்நாடக, இந்தியா

கட்டிடம்

தொகு

இக்காட்சிச்சாலையானது வைர-வடிவில் அமைந்துள்ளது. மூன்றடுக்கு மாடியில் அமைந்துள்ள இக்காட்சிச்சாலையின் முதல் மாடியில் 14 தொட்டிகளும், இரண்டாவது மாடியில் இரண்டு வரிசைகள் தலா 69 தொட்டிகளுடன் உள்ளது. இக்காட்சிச்சாலை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் திறந்திருக்கும். பிரதிவாரம் செவ்வாய்க்கிழமை விடுமுறை ஆகும்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உயிரினங்கள்

தொகு

விலாங்குகட்லா மீன்பெளி மீன் உட்பட பல்வேறு வகையான மீன் வகைகளும், பிற நீர்வாழ் உயிரினங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2]

நிர்வாகம்

தொகு

கருநாடக மாநில அரசு இக்காட்சிச்சாலையை நிர்வாகித்து வருகிறது.[1] 

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Bangalore Aquarium". bangaloreindia.org.uk. City of Bangalore. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
  2. "Cubbon Park:Aquarium". karnataka.com. karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.