பெங்களூரு மா இராமமூர்த்தி
மா இராமமூர்த்தி (Ma Ramamurthy) இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கன்னட ஆர்வலர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1] கன்னட வீர சேனானி என்றும் அழைக்கப்படும் இவர் 1918-1967 காலப்பகுதியில் வாழ்ந்தார். 1960 ஆம் ஆண்டுகளில் கன்னட இயக்கத்தின் தளபதியாக பெரும்பாலும் இவர் கருதப்படுகிறார். இராமமூர்த்தி சிவப்பு-மஞ்சள் நிறத்தில் கன்னட கொடியை வடிவமைத்ததில் பெயர் பெற்றார். கர்நாடகாவின் கிழக்கு பெங்களூரில் உள்ள இராமமூர்த்தி நகர் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[2][3] 'கன்னட வீர சேனானி' என்றும் இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் ஏ.என்.கிருட்டிணா ராவ் மற்றும் பலர் தலைமையில் கன்னட இயக்கத்தை முன்னணியில் இருந்து இராமமூர்த்தி வழிநடத்தினார்.[4]
மா இராமமூர்த்தி Ma Ramamurthy | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 11, 1918 நஞ்சன்கூடு |
இறப்பு | 1967 |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆர்யா கல்லூரி, பெங்களூர் |
பணி | எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் |
அரசியல் இயக்கம் | கன்னட இயக்கம் |
வாழ்க்கைத் துணை | கமலம்மா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி அன்று நஞ்சன்கூடில் ஒரு பிராமண குடும்பத்தில் மா இராமமூர்த்தி பிறந்தார். இவருடைய தந்தை வீரகேசரி சீதாராம சாசுத்திரி ஒரு குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இலக்கியவாதியாவார்.[5]
நினைவேந்தல்
தொகுஇவரை நினைவுகூரும் வகையில் பெங்களூரில் உள்ள ஒரு பகுதிக்கு இராமமூர்த்தி நகர் என்று பெயர் சூட்டப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Contributions of Ma Ramamurthy immense: Chand Bhasha". Citytoday. March 12, 2018. https://citytoday.news/contributions-of-ma-ramamurthy-immense-chandh-bhasha/.
- ↑ 2.0 2.1 Sripad, Ashwini M (July 21, 2017). "Wife of Kannada flag creator lives in destitute home". New Indian Express. https://www.newindianexpress.com/states/karnataka/2017/jul/21/wife-of-kannada-flag-creator-lives-in-destitute-home-1631528.html.
- ↑ "Who created Karnataka flag first? Check interesting facts about Kannada flag". Newsd.in. October 31, 2020. https://newsd.in/karnataka-rajyotsava-who-created-karnataka-flag-first-check-interesting-facts-about-kannada-flag/.
- ↑ Khajane, Muralidhara (July 19, 2017). "Ma. Ramamurthy, Kannada's forgotten flag-bearer". தி இந்து. https://www.thehindu.com/news/national/karnataka/ma-ramamurthy-kannadas-forgotten-flag-bearer/article19309743.ece.
- ↑ Ma.Ramamurthy, the Creator of Kannada flag, Karnataka History